states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

அமித் ஷா எப்போதும் மிரட்டல், சலிப்பூட்டும் பேச்சுகளை மட்டும் தான் பேசுகிறார். அவர் பீகாரின் வளர்ச்சி, வேலையின்மை, பணவீக்கம், வறுமை போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டும். லாலு மற்றும் என்னை திட்டிக்கொண்டே இருந்தால் பீகார் வளராது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

மதம் அதன் அளவில் பிரச்சனை அல்ல. இந்தியாவின் 81% மக்களால் பின்பற்றப்படும் இந்து மதம். உண்மையில் சகிப்புத்தன்மை நிறைந்த மதம் ஆகும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்து மதத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க விரும்பும் அரசியல்வாதிகள்தான்.

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ்

வாக்காளர் பட்டியலில் 80 வாக்காளர்களுக்கு ஒரு அறை மட்டுமே உள்ள ஒரு வீட்டின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரை கேட்டால், அந்த 80 பேரில் எவரையும் பார்க்கவில்லை என்று கூறுகிறார். வீட்டுக்கு பக்கத்தில் 36 ஆண்டுகளாக வாழ்பவரும் 80 பேரையும் பார்க்கவில்லையாம். இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன சொல்லும்?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாகேத் கோகலே

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் காரணத்தை கூறி, இந்தியாவுக்கு 50% வரி உயர்வை விதித்திருக்கிறது அமெரிக்கா. மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கியும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வேலை குறைந்தபாடில்லை. ரஷ்ய எண்ணெயால் ஒரு தொழிலதிபர் மட்டும் பெருமளவு பலன்களை பெற்றிருக்கிறார். அவர் பெயர் முகேஷ் அம்பானி.