வரிகளை கட்டாமல் தவிர்க்க வருமானத்தை குறைவாக காட்டும் பணக்கார இந்தியர்கள்
ஆய்வுக் கட்டுரை தகவல்
புதுதில்லி தில்லி பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் ராம் சிங் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கையில் பணக்கார இந்தியர்கள் வரிகளை கட்டுவதை தவிர்ப்பதற்காக அல்லது குறைத்து கட்டுவதற்காக தங்களின் வருமானத்தை குறைத்துக் காட்டுவ தாக தெரிய வந்துள்ளது. தேசியக் கணக்குத் தரவுகள் மற்றும் மக்களவை எம்.பி.க்களின் மாதிரித் தரவுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், பணக்கார இந்தியர்கள் தங்கள் வருமானத்தை குறைத்துக் காட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு கள் கடந்த ஆய்வுகளில் குறிப்பிட்டதை விட மிகவும் அதிகமாக இருக்கலாம் என்ற ஐயமும் இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் தெரிய வந்துள்ளது. பணக்கார தனிநபர்களின் செல்வம், நிலையான சொத்துக்கள் மற்றும் நீண்ட கால மூலதன முதலீடுகள் போன்றவை, அவர்களின் வருமா னத்தை விட ஒப்பீட்டளவில் அதிக ரிப்பது அசாதாரணமானது அல்ல. ஆனால் தேசியக் கணக்குகள், வரு மான வரி புள்ளிவிவரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ள வேட்பா ளர்களின் உறுதிச் சான்று (affidavid) ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் மூலமாக ஒரு குடும்பத்தின் செல்வம் அதிகரிக்கும் போது, அவர்கள் வருமான வரித்துறையிடம் அறிவிக்கும் வருமானம் மற்றும் செல்வத்தின் விகிதம் 0.6% க்கும் அதிக மாக குறைகிறது. உதாரணமாக ஒருவர் 1 கோடி சொத்து வைத்திருந்தால், அவர் அதன் மூலம் ஈட்டும் வருமானத்தை (வட்டி, வாடகை, லாபம் போன்றவை) முழுவ தையும் சட்டப்பூர்வமாக அறிவிப்ப தில்லை. வருமான வரி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட அனைத்து வித வருமானத்திலும் வருமானம்-செல்வ விகிதத்தில் இத்தகைய முரண்பாடுகள் தொடர்கிறது என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதுவே மிகவும் பணக்காரக் குடும்பங்களை கணக்கில் எடுத்தால் இந்த முரண்பாடு (மறைக்கப்படும் உண்மையான சொத்து விபரம்) இன்னும் அதிகமாக காட்டப்படுகிறது. ஒரு நாட்டில், ஒரு தனிநபர் எவ்வளவு பணக்காரராக ஆகிறாரோ, அவ்வளவுக்கு அதிகாரப்பூர்வ வரு மான வரி விகிதங்கள் உண்மையில் குறைகின்றன. தரவுகள் முரண்பாடு களை வெளிப்படுத்துகின்றன: அதாவது, “பங்கு பத்திரங்களை வைத்திருப்பதில் ஏற்படும் அதிகரிப்பு வருமானம் மற்றும் செல்வம் இரண்டிலும் ஒப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், விவ சாய நிலம் மற்றும் வணிக சொத்துக்க ளின் உரிமையில் ஏற்படும் அதிகரிப்பு செல்வத்தின் மீது அறிவிக்கப்படும் வருமானத்தைக் குறைக்கிறது,” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. வரிகட்டாமல் இருப்பதற்குப் பதிலாக குறைவாக வரி கட்ட இவ்வாறு கணக்கு காட்டப்படுகிறது. இவ்வாறு இருக்கக்கூடாது. இது தவறானது எனவும் அந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.