states

img

ஒன்றிய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஒன்றிய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்புக்கு  எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் ஒன்றிய பட்ஜெட்டில் கேரளா புறக்க ணிக்கப்பட்டதை அம்பலப்படுத்தும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் முன்வைத்த தீர்மானம் சட்ட மன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கேரளாவின் தேவைக ளுக்கு ஒன்றிய அரசு எந்தக் கவனமும் செலுத்த வில்லை. ஒன்றிய அரசின் புறக்கணிப்பு கேரளாவிற்கு முழுமையான ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜனநாயக கூட்டாட்சி விழுமி யங்களை ஒன்றிய அரசு அவமதித்து வருவதா கவும் முதலமைச்சர் கூறினார். பல ஆண்டுகளாக கேரளா முன்வைத்த பல  நியாயமான கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு எந்தக் கவனமும் செலுத்தவில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான வளர்ச்சி இருக்கும்போதுதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகும். ஒரு பகுதியின் சரிவு பொதுவான பலவீனத்திற்கு வழிவகுக்கும். எய்ம்ஸ், ரயில் திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனையின் தேவை என்பது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கேரளா எழுப்பி வரும் கோரிக்கையாகும். மாநில அரசு தேவையான நிலத்தைக் கண்டு பிடித்து, அதை கையகப்படுத்த தேவையான பெரும்பாலான நடவடிக்கைகளை முடித்துள் ளது. இருப்பினும், ஒன்றிய அரசிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. பட்ஜெட்டிலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு முற்றிலும் மௌனமாக உள்ளது. கேரளாவிற்கு உடனடி யாக ஒரு எய்ம்ஸ் ஒதுக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப மாதிரி எதுவாக இருந்தா லும், கேரளாவிற்கு அதிவேக ரயில் பாதை அவசியம். இதற்காக, மாநில அரசு பல முறை ஒன்றிய அரசை அணுகியுள்ளது. ஆனால், இந்த விசயத்திலும் கேரளா, ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-மங்களூர் வழித்தடத்தில் மூன்று மற்றும் நான்கு ரயில் பாதைகளுக்கான ஆய்வுப் பணிக ளைத் தொடங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை மாநில அரசு விடுத்துள்ளது. ஒன்றிய அரசு இதற்கும் செவிசாய்க்கவில்லை. விழிஞ்ஞம் : பாரபட்ச அணுகுமுறை நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு மைல்கல்லான விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்திற்கான செயல்திறன் இடைவெளி நிதி (VGF) குறித்து மாநில அரசு பலமுறை கோ ரிக்கை விடுத்த போதிலும், ஒன்றிய அரசு விஜிஎப்- நிதியை திருப்பிச் செலுத்த வேண்டிய தாக அனுமதித்துள்ளது. பல மாநிலங்களுக்கு விஜிஎப் நிதி வழங்கிய ஒன்றிய அரசு, விழிஞ்ஞம் தொடர்பாக பாரபட்சமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. கண்ணூர் விமான நிலை யத்திலிருந்து வெளிநாட்டு விமான நிறுவ னங்கள் சேவைகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப் படவில்லை. ஒன்றிய அரசு மாநிலத்திற்கான தனது அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், கேரளா மற்றும் முழு இந்தியாவின் வளர்ச்சிக்கும் அவசிய மான கோரிக்கைகளை கேரளா எழுப்பி வருவதா கவும் தீர்மானம் கூறுகிறது. கேரளாவின் கோ ரிக்கைகளைப் புரிந்துகொண்டு இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மா னத்தில் கூறப்பட்டுள்ளது.