states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் 

முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குரல் உச்ச நீதிமன்றத் தால் நேரில் கேட்கப்படுகிறது. அது நல்லதுதான். ஆனால், சத்தீஸ்கரில் நிலத்தை இழந்த ஒரு பழங்குடியினத் தலைவ ருக்கோ அல்லது ஏழு ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் வாடும் இன்ஜினியர் ரஷீத் போன்ற தேர்ந்தெடுக் ்கப்பட்ட காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ இத்தகைய விரைவான விசாரணை கிடைக்குமா?

சிபிஎம் மாநிலங்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

கடந்த 3 ஆண்டுகளில் நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் மூலம் ரூ.1.65 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக ஒன்றிய அரசு ஒப்புதல். என்எச்-66 மேம்பாட்டிற்காக கேரளாவின் ரூ.5,800 கோடி பங்களிப்பைப் பாராட்டி யுள்ளது.ஆனால் சுங்க வருவாயைப் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளது. நியாயமாக நடந்துகொள்ளாமல் பாராட்டுவது  மட்டும்  கூட்டாட்சி அல்ல.

திரிணாமுல் எம்பி சகேத் கோகலே

2020 -லிருந்து மொத்தம் 419 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளி யேறியுள்ளன. மோடி வெறும் விளம்பர முழக்க ங்களை (PR slogans) மட்டுமே வழங்குகிறார். ஆனால் இந்தியாவில் தொழில் செய்வது என்பது ஒரு திகிலான விசயமாக (Nightmare) மாறிவிட்டது என்பதே உண்மை.

எழுத்தாளர் சஞ்சய் ஜா

இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளராகச் செயல்படும் டொனால்டு டிரம்ப்பால் அறிவிக்கப்பட்ட இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஒரு முழுமை யான சரணாகதியாகும். இது அமெரிக்காவுக்கு இந்தியாவை மேலும் சுரண்டுவதை எளி தாக்கும் ஒரு விசித்திரமான ஒப்பந்தம்.