states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையில் அதானியின் நிலக்கரி திட்டத்துக்காக சுரங்கம்  வெட்டப்பட்டு வருகிறது. இந்த நாடு இல்லாமல்  போனாலும் பிரச்சனை கிடையாது. ஆனால் நம்  பிரதமரின் நேசத்துக்குரிய நண்பர் அதானி இருக்க வேண்டும். எனவே அதானியின் வளர்ச்சிக்காக அனை வரும் தியாகம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

ஒப்பந்தப் பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பாஜகவிற்கு மிகவும் முக்கியம் என்று தெரிகிறது. அதனால் தான் அவசர அவசரமாக கட்டிடங்களை இடித்தும், மரங்களை வெட்டியும் இதுவரை இல்லாத வகையில் மகாராஷ்டிராவின் முக்கிய அடையாளமான மும்பையை காற்று மாசுமிக்க நகரமாக மாற்றியுள்ளனர்.

உலகத்திலேயே மிகவும் மோசமான கெட்ட பழக்கம் கடன் தான் என யாருக்கும் புரிவதில்லை. சிகரெட் பழக்கம், மது பழக்கம் தனிநபரை மட்டுமே பாதிக்கும். ஆனால் கடன் உங்கள் குடும்பத்தையே பாதிக்கும்.

ஒரு காலத்தில் இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது  நிலைமை மாறிவிட்டது. கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2ஆவது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது. உடனடியாக கடினமான முடிவுகளை (கம்பீரை மாற்ற) எடுக்கவில்லை என்றால், நிச்சயம் சிக்கல் உருவாகும். 

ஹரியானா மாநிலம் ரோக்தக் பகுதியை சேர்ந்த ஹர்த்திக் ரதி (வயது 16) என்ற தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர், கூடைப்பந்து வளையத்தில் தொங்க முயற்சித்த போது, கம்பம் சரிந்து விழுந்து பலியானார்.

ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லி யத்தன்மையைப் பராமரிப்பு என்ற பெயரில், 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செய லிழக்கச் செய்துள்ளது.

கழிவுகளில் இருந்து முக்கிய கனிமங்களை பிரித் தெடுக்கும் மறுசுழற்சி திறனை ஆண்டொன்று க்கு 3 லட்சம் டன்னாக உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.