states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி

லாலு பிரசாத் பற்றி பேசுவதை ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். நிதிஷ் குமாருக்கு முன்பே எனது தந்தை லாலு 2 முறை முதலமைச்ச ராகவும், எம்.பி.,யாகவும் இருந்தவர். லாலு பல பிரதமர்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக ஆர்ஜேடி தான் நிதிஷ் குமாரை 2 முறை முதலமைச்சராக ஆக்கியது. இதனை மறந்திட வேண்டாம்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உண்மையை உரக்க கூறிய சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி மகாராஷ்டிர சட்ட மன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உண்மையைப் பேசுவதை இடைநீக்கம் மூலம் கட்டுப் ்படுத்தலாம் என்று சிலர் நினைத்தால், அது அவர்களின் எதிர்மறை எண்ணத்தின் சிறுபிள்ளைத் தனம் தான் தவிர வேறொன்றுமில்லை.

திரிணாமுல் மூத்த தலைவர் குணால் கோஷ்

மகாராஷ்டிரா, தில்லியில் வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் மூலம் பாஜக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் ஊழலில் இருந்து பாஜக தப்பியது. அதே ஊழலை மேற்கு வங்கத்திலும் மேற்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்

ஔரங்கசீப் குறித்த கருத்துக்காக சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது  துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற அரசியலை நாட்டிற்கே ் துரதிர்ஷ்டவசமாக நான் கருதுகிறேன். இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.