சமாஜ்வாதி எம்எல்ஏ இடைநீக்கம்
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தற் ்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மரா ட்டிய அரசர் சம்பாஜி யின் வாழ்க்கை வர லாற்றை மையப் படுத்தி இந்தியில் வெளியான “சாவா” திரைப்படம் குறித்து சட்டமன்ற வளாகத் தில் ஊடகத்துக்கு பதிலளித்த சமாஜ் வாதி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி, “அரசர் ஔரங்கசீப்புக்கும் அரசர் சம்பா ஜிக்கும் இடையேயான மோதல் அரசி யல் ரீதியானது. ஆனால் ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஜிடிபி இந்தியாவின் பங்கு 24% இருந்தது. இந்தியாவை “தங் கக்கிளி” என அழைக்கும் அளவுக்கு பொ ருளாதாரம் வலுவாக இருந்தது” எனக் கூறினார். அபு அசீம் ஆஸ்மியின் கருத்துக்கு மகாராஷ்டிர சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை முழுவதும் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், புதனன்று காலை மகாராஷ்டிர சட்டமன்றம் கூட்டம் கூடிய வுடன் அபு அசீம் ஆஸ்மியை இடை நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மகா ராஷ்டிரா சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் அபு அசீம் எம்எல்ஏ இடைநீக்கம் செய்யப்பட்டார்.