நாற்றமடிக்கும் உ.பி., சட்டமன்றம் ரூ.1,000 அபராதம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் எம் எல்ஏக்கள் சிலர் பான் மசா லாவை மென்று தின்றுவிட்டு துப்பி விடுகின்றனர். எம் எல்ஏ.க்கள் பான் மசா லாவை துப்புவதால் சட்டமன்றம் அசுத்த மாகி தூய்மைப் படுத்த முடிய வில்லை என புகார் எழுந்துள்ளது. செவ்வாய்கிழமை சபா நாயகர் சதீஷ் மகான் பான் மசாலாவை மென்று தின்றுவிட்டு துப்பிச் சென்ற படிமத்தை பார்த்து கோபமடைந்தார். இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மகான் புதன்கிழமை அன்று,”இனி சட்ட மன்ற வளாகத்தில் பான் மசாலா போட்டு மென்று துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.