சண்டிகருக்கு தனி ஆளுநர் நியமிக்க மோடி அரசு திட்டம் பஞ்சாப் அரசு கடும் எதிர்ப்பு
சண்டிகர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாகவும், அதில் சண்டிகருக்கு தனி ஆளுநர் நிய மிக்கும் வகையில் 131ஆவது அர சியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராக இருக்கும் சண்டிகர் யூனியன் பிர தேசம் ஆகும். நாட்டிலேயே தொலைநோக்கு பார்வையுடன் வடிவமைக்கப்பட்ட நகரம் என்ற பெயரும் சண்டிகருக்கு உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஹரி யானாவில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. இரு மாநிலங்க ளுக்கும் தனித்தனியே ஆளுநர் கள் உள்ளனர். ஆனால் சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளு நரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில, பஞ்சாப் ஆளு நாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளு நர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கி ரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பஞ்சாப் முத லமைச்சர் பகவந்த் மான் கூறுகை யில்,”சண்டிகருக்கு தனி துணை நிலை ஆளுநர் நியமிப்பது நல்ல தல்ல. இது கடுமையான அநீதி ஆகும். பஞ்சாப்பின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்கிறது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதே போல ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரி வால், ”சண்டிகருக்கு தனி ஆளுநர் நியமிக்க திட்டமிட்டு இருப்பது பஞ்சாப்பின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதை குறிக்கி றது. மேலும் கூட்டாட்சி கட்ட மைப்பைப் பிளவுபடுத்துகிறது. சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமா னது; சண்டிகர் பஞ்சாப் உடன் தான் சேர்ந்து இருக்கும்” என அவர் கூறி யுள்ளார்.
பஞ்சாப்பில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக தீவிரம்
விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு மீது பஞ்சாப் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அங்கு நடைபெற்று வரும் தேர்தல்களில் பாஜக அடிமேல் அடி வாங்கி வருகிறது. இனிமேல் பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த மோடி அரசு, பஞ்சாப் பின் தலைநகராக இருக்கும் சண்டிகரில் துணை நிலை ஆளுநரை நியமித்து அங்கு குழப்பத்தை ஏற்படுத்த மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு தான் 131ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் சண்டிகரில் தனி ஆட்சி அதிகாரம் செலுத்த மோடி அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.