அமெரிக்காவில் ஈரானுக்கு ஆதரவாக போராட்டம்
இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இத்தகைய சூழலில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், ஈரான் - இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.