states

img

ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதை நோக்கி ஒன்றிய அரசு முன்னேற்றம்

2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றி னார். அப்போது அவர் கூறுகையில்,”2 மாதங்க ளுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடி னோம். அனைத்து இந்தியர்களின் சார்பாகவும், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியல மைப்பு நிர்ணயக் குழுவில் இருந்த அனைவ ருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

6 கோடி மூத்த குடிமக்களுக்கு...

எனது அரசாங்கம் பழங்குடி சமூகத்தின் ஐந்து கோடி மக்களுக்காக “தார்தி ஆபா பழங்குடி கிராம மேம்பாட்டு திட்டத்தை” தொடங்கியுள்ளது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” சட்டம், வக்பு திருத்த சட்டம் ஆகிய வற்றைக் கொண்டு வருவதை நோக்கி அரசாங் கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம் இளைஞர்களின் கல்வி மற்றும் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 6 கோடி மூத்த குடிமக்களு க்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது. 3 கோடி  பெண்களை லட்சாதிபதி களாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.  நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்.

1,700 புதிய விமானங்கள்...

இன்று நமது இளைஞர்கள் ஸ்டார்ட்அப்கள் முதல் விளையாட்டு, விண்வெளி வரை அனை த்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை தேடித் தருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது. உலகின் கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியாவை மாற்று வதே எங்கள் நோக்கம். செயற்கை நுண்ணறி வுத் துறையில், இந்திய ஏஐ மிஷன் தொடங் கப்பட்டுள்ளது.  விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்க ளுக்கான ஆர்டர்களை வழங்குவதன் மூலம் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேக மாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் இப்போது 1,000 கிலோமீட்டர் மைல்கல்லைக் கடந்துவிட்டது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் “ஆரோக்கிய கோவில்கள்” நிறுவப் பட்டுள்ளன.

வளர்ச்சிப் பாதையில்  வடகிழக்கு மாநிலங்கள்... 

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் இணைந்துள் ளது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கின் 8 மாநிலங்களின் திறனை முழு  நாடும் காண உதவும் வகையில், முதல் அஷ்ட லட்சுமி மஹோத்சவம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  2047இல் வளர்ந்த பாரதம்.... விவசாயிகளுக்கு உதவித்தொகையாக இந்த ஆட்சியில் ரூ.41,000 கோடி வழங்கப் பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொரு ளாதாரமாக இந்தியா மாறும். புற்று நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய  அரசின் மருந்த கங்கள் மூலமாக 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள் ளனர். “2047இல் வளர்ந்த பாரதம்” என்ற நமது இலக்கு உலகைக் கவர்ந்துள்ளது” என அவர் கூறினார்.