100 வீடுகளுக்கு ரூ. 20 கோடி வழங்கிய விழாவில் பினராயி விஜயன் உறுதி
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை - சுரல்மலை நிலச்சரி வால் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்காக கட்டப்பட்டு வரும் வயநாடு டவுன்ஷிப் திட்டம் குறித்த நேரத்தில் முடிக் கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரம் மத்திய விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வழங்கிய 100 வீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந் தத்தையும் தொகையையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”டிஒய்எப்ஐ 25 வீடுகளை அறிவித்திருந்தது. அதை 100 ஆக உயர்த்துவது ஒரு முன்மாதிரியான செயல். நகரத்தில் ஒரு வீட்டின் விலை 20 லட்சம் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
கட்டுமானப் பணி கள் 27ஆம் தேதி துவக்கப்படும். தகுதியான அனைத்து மக்களும் மறுவாழ்வு பெறுவார்கள். வீடுகளுக்கு சிறந்த பாதுகாப்பு உறுதி செய் யப்படும். வெள்ளம் மற்றும் கொரோனா இரண்டி லும் ஒன்றிய அரசு கேரளத்தின் மீது கொடூரமான புறக்கணிப்பைக் காட்டுகிறது. சில கெடு புத்திக் காரர்கள் “இந்த நாடு (கேரளம்) அழியட்டும்” என்று நினைத்தனர். இருப்பினும் அசாதாரண ஒற்றுமை மற்றும் மக்களின் ஒத்துழைப்பைக் காட்டியதன் மூலம் நாடு அதிலிருந்து தப்பித்தது” என்று முதலமைச்சர் கூறினார்.
விழாவிற்கு டிஒய்எப்ஐ மாநிலத் தலைவர் வி.வசீப் தலைமை தாங்கினார். மாநில செயலா ளர் வி.கே.சனோஜ், அமைச்சர்கள் கே. ராஜன், ஓ.ஆர்.கேளு, பி.ஏ.முகமது ரியாஸ், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி. ஜாய், டிஒய்எப்ஐ அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர் ஷிஜு கான், திருவனந்த புரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.விஜயகுமார் மற்றும் சிந்தா ஜெரோம் ஆகியோர் பேசினர்.
“நம்ம வயநாடு” என்ற பிரபலமான பிரச்சா ரத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.20 கோடியை வீடுகள் கட்டுவதற்காக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் முதலமைச்சரிடம் வழங்கியது. குப்பைகளை சேகரித்தல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், கார்களை கழுவு தல், மீன் விற்பனை செய்தல் போன் வழிகளில் அவர்கள் இந்த பணத்தை திரட்டினர். இளை ஞர்களின் உறுதியையும் கடின உழைப்பையும் சமூகம் ஆதரித்தது. உள்ளூர்வாசிகள் அவர்க ளுக்கு நகைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தைக் கூட கொடுத்தனர். சேமித்த உண்டியல் பணத் தைக் கொடுத்து குழந்தைகள் ஆதரவு அளித்தனர். மேலும் கல்வி ஊக்குவிப்பு பணத்தை நன்கொடையாக அளித்து மாண வர்கள் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.