states

img

கடற்கரை சாலை தனியாருக்கு தாரைவார்ப்பு சிபிஎம் கடும் எதிர்ப்பு

கடற்கரை சாலை  தனியாருக்கு தாரைவார்ப்பு

சிபிஎம் கடும் எதிர்ப்பு

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தின் கடற்கரை சாலை க்கு அருகிலுள்ளது துறைமுகம் பூங்கா. 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகம் பூங்கா நிலங்களை லுலு குழுமத்திற்கு (ஐக்கிய அரபு அமீ ரக நிறுவனம்) தாரை வார்க்க ஆந்திர அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் எம்.ஜக்கு நாயுடு  செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறு கையில்,”துறைமுகம் பூங்கா இடம் ரூ.2000 கோடி மதிப்புள்ளது. ஆனால்  ஆந்திர பாஜக கூட்டணி அரசாங்கம் நிலங்களை மலிவான விலைக்கு கொடுக்க முயற்சிக்கிறது. தனியாருக்கு வழங்குவதற்கு பதிலாக அந்த நிலத்தை ஒரு அறிவியல் அருங்காட்சிய கத்திற்காகவோ அல்லது மக்களுக்கு உதவும் வேறு நோக்கத்திற்காகவோ கொடுக்க வேண்டும். குறிப்பாக லுலு குழுமம் துறைமுகம் பூங்காவை கைப் பற்றினால் அந்தப் பகுதியில் உள்ள சிறு வணிகங்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்படும்” என அவர் எச்சரித் துள்ளார். சிபிஎம் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விசாகப்பட்டினம் துறைமுகம் பூங்கா வை லுலு குழுமத்திற்கு வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.