states

img

நாடாளுமன்ற ஜனநாயகமும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பும் - என்.ஆர்.இளங்கோ

நாடாளுமன்ற ஜனநாயகமும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பும் - என்.ஆர்.இளங்கோ

திமுக-கம்யூனிஸ்ட் உறவு நீண்ட வரலாறு கொண்டது. 1967-ல் அறிஞர் அண்ணா, “எனது இடதுபக்கத்தில் பி.ஆர். இருக்கிறார், எனக்கென்ன கவலை” என்று குறிப்பிட்டார். இதுவே இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கமான பாதையின் தொடக்கமாகும்.  மொழி உரிமைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள்  1967-ல் அலுவல்மொழி திருத்த மசோதா மீதான விவாதத்தில் பி.ஆர். அவர்கள் “அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களே எல்லா மொழிகளையும் ஒரே மட்டத்திற்கு உயர்த்த முயற்சிப்பதன் அவசியத்தை உணரவில்லை” என்று சுட்டிக்காட்டினார். சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து, “தேசத்தின் ஒற்றுமையை இன்றைய ஆட்சியாளர்களின் போக்கு சீர்குலைக்கிறது” என்று எச்சரித்தார்.  பிற்காலத்தில் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் சமஸ்கிருத வாரத்திற்கு மாறாக செம்மொழிகள் வாரம் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். மொழி உரிமை மீதான இந்த அக்கறை திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பொதுவானது.  

பி.ஆர்: ஜனநாயகப் போராளி 

வேட்பாளர் வெளிப்படைத்தன்மைக்கான முன்னோடி

 1967-ல் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் பி.ஆர். அவர்கள், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி உரையாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதுவே பிற்காலத்தில் உச்சநீதிமன்றம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வேட்பாளர்கள் குறித்த முழுத் தகவலை யும் தெரி விக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு அடித்தளமாயிற்று.  

தெளிவான  சட்டங்களுக்கான குரல்  

“இஃப் என்ற வார்த்தை எதற்காக பயன் படுத்துகிறீர்கள்? இத்தனை ‘இஃப்’ பயன் படுத்தினால், இந்த சட்டத்திற்கும், எங்கள் ஊரில் நடக்கும் மெட்ராஸ் ரேஸ் ஜாக்பாட்க்கும் வித்தியாசம் இல்லை” என்று சட்டங்களின் தெளிவின்மையை கடுமையாக விமர்சித்தார். சட்டங்கள் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.  

பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்  

1969-ல் ONGC, அலுமினியம், கனிமவளங்கள் குறித்த விவாதத்தில், பெரிய நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை கடுமையாக விமர்சித்தார். பி.ஆர். பேசிய பிர்லா குறித்த விமர்சனம் இன்றைய அதானி குறித்த விமர்சனத்திற்கு ஒப்பானது.  

தனிமனித சுதந்திரத்திற்கான போராட்டம்

  “ஒரு மனிதனை சிறையில் அடைப்பதற்கு எதற்காக நிர்வாகத்துறைக்கு அதிகாரம் தர வேண்டும்? இது நீதித்துறை செய்ய வேண்டிய வேலை” என்று வலியுறுத்தினார். மனிதனின் வாழும் சுதந்திரம் (Life and Liberty) குறித்த இந்த அக்கறை ஜனநாயகத்தின் மீதான கம்யூனிஸ்ட்டுகளின் அழுத்தமான நம்பிக்கையை காட்டுகிறது.

 வரி நீதிக்கான போராட்டம்

 வரி ஏய்ப்பு செய்யும் பெரிய முதலாளிகளை அரசாங்கம் கண்டுகொள்ளா மல், ஏழைகளின் சிறு விதிமீறல்களை கடுமையாக தண்டிப்பதை எதிர்த்து குரல் கொடுத்தார்

  கூட்டாட்சிக்கான போராட்டம்

 1969-ல் மேற்கு வங்க மேலவையை கலைக்கும் சட்ட முன்வடிவை ஆதரித்தபோது, “மாநிலத்திற்கு இரண்டாவது அவை தேவையில்லை, ஆனால் மாநிலங்களவை இருக்க வேண்டும்” என்று பேசினார். “அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்” என்ற அவரது கோரிக்கை இன்றும் பொருத்தமானது.  

போராட்டத்தின் தொடர்ச்சி

 பி.ஆர்க்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து டி.கே.ரங்கராஜன், அதற்குப் பின் 15 ஆண்டுகள் கழித்து இன்றைய உறுப்பினர்கள் – 75 ஆண்டுகளாக ஒரே போராட்டம் தொடர்கிறது. தற்போது கூட மாநிலங்களவையில் ஜான்பிரிட்டாஸ் போன்ற சிபிஎம் உறுப்பினர்கள் திமுகவுடன் இணைந்து போராடுகிறார்கள்.  

கூட்டுப் போராட்டம்

 ஜனநாயகம் குறித்து கம்யூனிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட்டுகள் பேசிய கருத்துகள் இன்றளவும் பொருத்தமானவை. ஆதிக்கமாக ஒருவர் ஆட்சி செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும். பி.ஆர். மட்டுமல்ல, கம்யூனி ஸ்ட்டுகள் அனைவருமே ஜனநாயகத்தை காப்பதிலும், கூட்டாட்சியை பாதுகாப்பதிலும் முன்னணியில் நிற்கிறார்கள். திமுகவும், கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்தே இந்த போராட்டத்தில் நிற்கிறோம்.