அதிமுக-பாஜக வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (மார்ச் 14) 9.30 மணிக்கு கூடியது. 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கினார். அப்போது, எதிர் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச அனுமதி கோரினார். இதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதி மறுத்தார். அதைத் தொடர்ந்து, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரி னார். அவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து, பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து. அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பேரவையிலிருந்து வெளியே றினர். இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக உறுப்பி னர்களும் வெளிநடப்பு செய்தனர். சிறது நேரத்திற்கு பிறகு, ஓபிஎஸ் அணியிரும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தடைகளை தாண்டி...
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச் சிக்கு வழிகாட்டும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2 ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மழலை குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம் என தமிழ்நாடு அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை உலக நாடுகளும் வியந்து பாராட்டுகிறது. இந்தியாவிற்கே தமிழ்நாடு முன் னோடியாக செயல்படுகிறது. இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் சர்வதேச அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வீறு நடைபோடுகிறது. இந்த நூற்றாண்டு பயணம் வெற்றிகர மானது என எதிர்காலத்தில் தடை களை தாண்டி வளர்ச்சிகளை நோக்கி மேலும் எழுச்சியுடன் செல்ல வேண்டிய தேவையை குறிக்கிறது. எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டிற்கு தேவைப் படுகிறது.