சிபிஎம் அகில இந்திய மாநாட்டு கோரிக்கை பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை யில் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டு கோரிக்கை களை விளக்கி, ஞாயிறன்று (மார்ச் 16) பிரச்சார ஊர்வலம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்டக்குழு சார்பாக நடைபெற்ற இரு சக்கர வாகன பிரச்சாரத்திற்கு வட்டச்செய லாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சுகுணா கட்சி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ப.செல்வன் பிரச்சார நோட்டிஸ் அறிமுகம் செய்து, 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மாநாடு ஸ்டிக்கர் ஒட்டி, மாநாடு கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். இருசக்கர வாகன பிரச்சார ஊர்வலம் வந்தவாசி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு துவங்கி, கோட்டை மூலை வழியாக பழைய பேருந்து நிலை யம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சுகுமார், அண்ணாமலை, சேட்டு,ஆனந்தன், நகரச்செயலாளர் ராதகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், முருகன், தேவராஜ், வீரமணி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
சந்தை மேட்டில் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் இடிப்பு
சிபிஎம் முயற்சியில் அதே இடத்தில் வீடுகள் அமைப்பு
தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் ஒன்றியம் வெள்ளிச்சந்தை அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கள் கட்டி குடியிருந்து வரும் சந்தைமேடு பட்டியலின மக்களின் 10 வீடுகள் அரசு அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. மேலும் 10 வீடுகளின் மின் இணைப்பை துண்டித்து மீட்டரை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து சிபிஎம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தொடர்ந்து போராடியதால் தற்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதுடன் மீட்டரும் பொருத்தப்பட்டது. இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜா,செயற்குழு உறுப்பினர் சி.பி.ஜெயராமன் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், ராயக்கோட்டை கிளை செயலாளர் துர்வாசன் தலைமையில் 10 வீடுகள் இருந்த அதே இடத்தில் மீண்டும் குடிசைகள் அமைக்கப்பட்டது. மேலும் 48 குடும்பங்களுக்கும் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பட்டாக்க ளுக்கும் உடனடியாக வீடுகள் கட்டித் தர வேண்டும்,அதுவரை சந்தைமேடு மக்கள் வேறு எங்கும் செல்ல முடியாது.தொடர்ந்து வீடுகளை இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
அகில இந்திய நுழைவுத்தேர்வுகளில்
பங்கேற்க பழங்குடியினருக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாண வர்கள் 65 விழுக்காடும், பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 விழுக்காடு மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யவும். மேலும் சிபிசிஎல் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் மணலியில் உள்ள சிபிசிஎல் பாலி டெக்னிக் கல்லூரியில் இலவசமாக தங்கி பயிலலாம்.