tamilnadu

img

புளூ கிராஸ் ஆஃப் இந்தியா  60 ஆண்டு ஆவண நூல் வெளியீடு  

காலமானார்

அம்பத்தூர், மார்ச் 16- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ் ராவ்  தந்தை யும், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.கே.சம்பத்ராவ் மைத்துனருமான சங்கர் ராவ் (88) சனிக்கிழமை (மார்ச் 15) காலமானார். அண்ணனூர் ஸ்ரீ சக்தி நகர் , சிலப்பதிகாரம் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத் தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மா.பூபாலன், ஆர்.கோபி, நிர்வாகிகள் இ.பாக்கியம், ஜெ.ரவி, ராம மூர்த்தி,  மின் ஊழியர் மத்திய அமைப்பின்  மாநில துணை  பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மேற்கு கிளை  தலைவர் எஸ்.தசரதன், நிர்வாகிகள் குப்பன், முனியாண்டி,  எலக்ட்ரிகல் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகி கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஞாயிறன்று (மார்ச் 16) மாலை  சோழம்பேடு பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 புளூ கிராஸ் ஆஃப் இந்தியா  60 ஆண்டு ஆவண நூல் வெளியீடு  

சென்னை, மார்ச்  15- புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் 60 ஆண்டுகளை ஆவண ப்படுத்தும் வகையில் ‘மெமரீஸ் அண்ட் மைல்ஸ்டோன்ஸ்’ என்கிற ஆங்கில நூலில் மறக்க முடியாத தருணங்களை வர லாற்றாசிரியர் வி. ஸ்ரீராம் மற்றும் லஷ்மண் ஆகியோர் எழுதி யுள்ளனர்.  சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் தேசியப் புலனாய்வு அமைப்பின் முன்னாள் சிறப்பு அரசு  வழக்கறிஞருமான த பி.என். பிரகாஷ் இந்த நூலை (மார்ச் 15) வெளியிட்டார்.  சென்னையில் நடைபெற்ற விழாவில் விலங்கு உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேனகா சஞ்சய் காந்தி மற்றும் தமிழ்நாடு அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜி ஆகியோரின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.