tamilnadu

ஏப்ரல் 30 வரை சட்டசபை கூட்டத்தொடர்

ஏப்ரல் 30 வரை சட்டசபை கூட்டத்தொடர்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்.30 ஆம் தேதி வரை நடைபெ றும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளியன்று தொடங்கியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் பிறகு, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்  பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடை பெற்றது. இதில் அனைத்து கட்சி உறுப்பினர் கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு,  பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தி யாளர்களிடம் கூறுகையில், “மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய் கிறார். அதைத் தொடர்ந்து, மார்ச் 17 முதல் 5  நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொது விவாத மும், பதிலுரையும் நடைபெறும். மார்ச் 24  ஆம் தேதி முதல் ஏப். 30 ஆம் தேதி வரை 24  நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். தினமும் மானிய கோரிக்கையின் மீது விவாதம்,  வாக்கெடுப்பு நடைபெறும்” என்றார்.