எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு கூட்டுக் குழுவிற்கு சென்ற விக்சித் பாரத் மசோதா
நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களை யும் கலைத்துவிட்டு, அவை அனைத்தையும் ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கான “விக்சித் பாரத் சிக்சா ஆதிக்சன்” என்ற புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திங்களன்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மூலம் இந்தியை மறை முகமாக தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு திணிக்க முற்படுவதாக தமிழக எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். இத னைத்தொடர்ந்து மசோதாவை நாடாளு மன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்ப தாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.