பீகாரில் தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய பாஜக கூட்டணி அரசு
கொடுத்த ரூ.10,000 பணத்தை திரும்பக் கேட்டு நோட்டீஸ்
பாட்னா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்த லில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வாக்குத் திருட்டு (எஸ்ஐஆர்) மற்றும் ரூ.10,000 தொகை (பெண்களுக்கு) அளித்ததன் மூலமாக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்நிலையில், தேர்தலுக்காக கொடுக் கப்பட்ட ரூ.10,000 தொகையை மீண்டும் கொடுக் கும் படி, பீகார் பாஜக கூட்டணி அரசு பெண் களை மிரட்டும் வேலையை தொடங்கி யுள்ளது. இதுதொடர்பாக பிரபல இந்தி பத்திரிகையாளரான ரன்விஜய் சிங் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “பீகாரில் சில பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ.10,000 திரும்பச் செலுத்தும்படி அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் அரசு ரூ.10,000 அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த வுடன் அதைத் திரும்பக் கேட்கிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டால், பெண்களுக் குப் பதிலாக ஆண்களின் வங்கிக் கணக்குக ளுக்கும் ரூ.10,000 தொகையை தவறுதலாகச் சென்றுவிட்டது. அதனால் இப்போது வசூலிக் கப்படுகிறது என மழுப்பலாக பதில் வருகிறது. கொடுத்த பணத்தை கேட்கிறார்கள் சரி, பீகார் பாஜக கூட்டணி அரசு தாங்கள் பெற்ற வாக்குகளைத் திரும்பக் கொடுக்குமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.