states

img

மணிப்பூரில் புதிய முதல்வர்

மணிப்பூரில் புதிய முதல்வர்

மணிப்பூர் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சராக மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் யும்நம் கேம்சந்த் சிங் (62) அறிவிக்கப்பட்டுள்ளார்.   மணிப்பூரில் கடந்த 2023 மே 3 அன்று மெய்டெய் மற்றும் குக்கி இன மக்களிடையே  உருவாக்கப்பட்ட இனக் கலவரத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்தனர். 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.  இந்தச் சூழலில் எழுந்த கடும் அழுத் தம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக  2025 பிப்ரவரி 9 அன்று  பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் தனது பதவியை ராஜி னாமா செய்தார். இதனால் அங்கு குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. உட்கட்சி பூசலால்  புதிய முதல மைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் ஓராண்டு காலமாக நீடித்து வந்த சிக்கல் முடிந்துள்ள நிலையில் புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக மணிப்பூரில் நடை பெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.