states

காலர் ஐடி செயலியின்றி அழைப்பவர் பெயரை அறிய புதிய ஏற்பாடு

காலர் ஐடி செயலியின்றி அழைப்பவர் பெயரை அறிய புதிய ஏற்பாடு

ஸ்மார்ட்போன்களில் தங்க ளுக்கு தெரியாத மற்றும் தொடர்பில் (contact) இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் விபரத்தை அறிய ட்ரூகாலர் (Truecaller) வசதி உள்ளது. இதில் 70% அளவில் செல்போனில் அழைப் பவர் யார் என தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், ட்ரூகாலர் உள்ளிட்ட செயலிகள் உதவியின்றி செல்போனில் அழைப்பவர் யார் என தெரிந்து கொள்ள எச்பி, டெல், எரிக்சன், நோக்கியாவுடன் இணைந்து ஜியோ, ஏர்டெல், வோட போன் உள்ளிட்ட நிறுவனங்கள் மென் பொருளை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பரிசோதனைகள் ஏறக்குறைய முடிவடை ந்து விட்டதாகவும், அனைத்துகட்ட பரி சோதனைகளும் முடிந்த பிறகு விரை வில் ட்ரூகாலர் செயலிகள் உதவியின்றி அழைப்பவர் பெயரை அறியலாம் எனக் கூறப்படுகிறது.