states

img

“முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி தரக்கூடாது” ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டுச் சதியால் மூடப்படும் மருத்துவக்கல்லூரி

“முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி தரக்கூடாது” ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டுச் சதியால் மூடப்படும் மருத்துவக்கல்லூரி

ஜம்மு ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்  துவக் கல்லூரியில் முஸ்லிம்  மாணவர்கள் சேர்க்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஆதரவு பெற்ற குழுக்கள் போராட்  டம் நடத்தி வருகின்றன.  இதனைத்தொடர்ந்து  ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக கடந்த  ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை  தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தற்போது ரத்து செய்துள் ளது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி சங்கர்ஷ் சமிதி அமைப்பினர், செவ்வாய்க்கிழமை ஜம்மு தலை மைச் செயலகம் முன்பு போராட்டம்  நடத்திய சில மணி நேரங்களிலேயே கல்லூரியில் அடிப்படைத் தர நிலைகள் முறையாகப் பின்பற்றப்  படவில்லை என்று கூறி, கல்லூ ரிக்கு வழங்கப்பட்ட அனுமதி கடி தத்தை தேசிய மருத்துவ ஆணை யம் திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட அனைத்து  மாணவர்களுக்கும் அம்மாநிலத் தின் வேறு கல்லூரிகளில் இடம்  ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள் ளது. எனினும் ஆர்எஸ்எஸ் பாஜக வின் கூட்டு சதியின் காரணமாக முஸ்லிம் மாணவர்களின் கல்வி பெரும் ஆபத்தை சந்தித்து வரு கிறது.   ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி  மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி (SMVD) மருத்து வக் கல்லூரி  கடந்த ஆண்டு தொட ங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூ ரியின் முதல் பிரிவில் (First Batch) மொத்தம் 50 இடங்கள் உள்ளன. இதில் ‘நீட்’  தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வுப் பட்டியலில் இந்து மாண வர்களை விட  காஷ்மீர் பள்ளத் தாக்கைச் சேர்ந்த முஸ்லிம் மாண வர்கள் அதிக இடம் பிடித்துள்ள னர். இந்தத் தேர்வுப் பட்டியல் வெளி யானதில் இருந்தே, முஸ்லீம் மாண வர்களின் கல்வியை திட்டமிட்டு கெடுக்கும் வகையில்  ஜம்முவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை  அமைப்புகள் முஸ்லிம் மாணவர்  களின் சேர்க்கைக்கு எதிர்ப்புத் தெரி வித்து அவர்களுக்கு இடம் தரக் கூடாது என மாணவர்களிடையே  மதக்கலவரத்தை தூண்டி வரு கின்றனர்.  ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி  சங்கர்ஷ் சமிதியின் இளைஞர் பிரிவு தான் இந்தக் கலவரத்தை தூண்டி வரும் முதன்மை அமைப் பாக உள்ளது. இவ்வமைப்பு இந்  துக்கள் அல்லாத மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய வேண் டும் அல்லது கல்லூரியையே மூட  வேண்டும். மாற்று மதத்தினர் வளா கத்தில் இருப்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்று பிரச்சாரம் செய்து வரு கின்றது.மேலும் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வரும் பக்தர்களின் காணிக்கை பணத்தில் இந்தக் கல்லூரி இயங்குகிறது. அதனால் முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தினர் அங்கு படிக்கக் கூடாது என அவ் வமைப்பு கூறுகிறது.   இந்நிலையில் அக்கல்லூரி,  ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேர வையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு  பல்கலைக்கழகத்தால் நிர்வ கிக்கப்படுகிறது. சட்டப்படி மத  அடிப்படையில் மாணவர் சேர்க்கை யைத் தடுக்க முடியாது என்பதே அர சின் நிலைப்பாடு. மேலும், இந்தக்  கல்லூரிக்கு அரசு தரப்பில் இருந் தும் கடந்த சில ஆண்டுகளில் சுமார்  121 கோடி ரூபாய் நிதி வழங்கப் பட்டுள்ளது என முதல்வர் உமர் அப்  துல்லா தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில் கலவரக் காரர்களுக்கு ஆதரவாக பாஜக உள்ளது. “மாதா வைஷ்ணவ தேவி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும்” என்று ஜம்மு-காஷ்மீர் எதிர்க்கட்சித் தலை வர் (பாஜக) சுனில் சர்மா கூறி யுள்ளார்.