states

img

சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மரணம்

சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மரணம்

மோடி அரசின் “குட்டு” அம்பலமானது

கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு தெரிவித்த மரண எண்ணி க்கை நம்பகமானதாக இல்லை. உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.  அந்த சந்தேகம் இப்போது உண்மையாகி யுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட சிவில் பதிவு முறை (CRS) அடிப்படையிலான அதிகாரப் பூர்வ தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் அதாவது கொரோனா தொற்று அதிகரித்திருந்த காலத்தில் சுமார் 25.8 லட்சத்திற்கும் அதிக மான இறப்புகள் பதிவாகியுள்ளன. மோடி தலைமையிலான பாஜக அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றி விட்டோம், தொற்றை நன்றாகக் கட்டுப்படுத்தி விட்டோம் என தொடர்ந்து  விளம்பரங்கள் செய்து கொரோனா காலத்தில் செய்த  தனது தவறுகளை மூடி மறைக்க முயன்றது. ஆனால் தற்போது அறிவியல்பூர்வமாக வெளியாகியுள்ள ஆதாரங்கள், தரவுகளே மோடி அரசை அம்பலப்படுத்தியுள்ளன. 6 மடங்கு அதிகம் இரண்டு ஆண்டு காலத்தில் மக்கள்தொகை யில் இயற்கையான அதிகரிப்பைக் கணக்கிட்ட பிறகு, 2021 ஆம் ஆண்டில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது கொரோனா தொற்றில் இறந்ததாக அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும்.  கொரோனா காலத்தில் குஜராத்தில் 5,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் தற்போதைய பாஜக அரசின் தரவுகள், அதனை விட சுமார் 33 மடங்கு  அதிகமாக 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. குஜராத் மட்டுமின்றி மத்தியப் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வ கொரோனா கால மரணத்தை விட 18 மடங்கு அதிகமாகவும், மேற்கு வங்கத்தில் 15 மடங்கு அதிகமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போல பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக மரணங்கள் பதிவாகியுள்ளன.  அதிகாரப்பூர்வ கொரோனா மரண எண்ணிக்கைகளுக்கும் அந்த ஆண்டில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான மிகக் குறைந்த வேறுபாடு கொண்ட மாநிலங்களாக கேரளா, உத்தர கண்ட், அசாம், மகாராஷ்டிரா, தில்லி ஆகிய மாநிலங்கள் இருப்பதாக இத்தரவுகள் காட்டுகின்றன.