states

img

உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இருந்து மோடி மீண்டும் நீக்கம்

உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இருந்து மோடி மீண்டும் நீக்கம்

ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த “டைம் இதழ்”

நியூயார்க் சர்வதேச அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்தக் கூடிய வர்கள், சினிமா, மக்கள் பணி, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட பிரபலங்கள் “டாப் 100” பேரை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பிரபல ஆங்கில பத்திரிகையான “டைம் இதழ் (TIME maga zine)” சிறப்பிதழ் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த பட்டியலில் மோடி பிரதமர் ஆன பின்பு உலகளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் 5 முறை ( 2014, 2015, 2017, 2020, 2021) இடம்பிடித்தார். டைம் இதழின் வெளியீட்டை பாஜக தேர்தல் பிரச்சாரப் பொருளாகக் கூட பயன்படுத்தியது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான டாப் 100 பேர்களின் பட்டியலை டைம் இதழ் வெளி யிட்டுள்ளது. அதில்  செல்வாக்கு மிகுந்த தலை வர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் நீக்கப் பட்டுள்ளார். செல்வாக்கு மிகுந்த பட்டியலில் அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். மோடி மீண்டும் புறக்க ணிக்கப்பட்டுள்ளது  ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரி வார் கும்பலுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. என்ன காரணம்? மோடி 2ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு, அதாவது 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதல் மிக மோசமான அளவில் அதிகரிப்பு, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள், புல்டோசர் அராஜகம், மதச்சார்பின்மையை வலுவிழக்கச் செய்தல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவ தூறாகப் பிரச்சாரம் மேற்கொண்டது என பல்வேறு சம்பவங்களால் டைம் இதழ் பிரதமர் மோடியை மீண்டும் புறக்கணித்துள்ளதாக விமர்சகர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்எஸ்எஸ் - பாஜகவால் இந்தியர்களும் புறக்கணிப்பு 2025ஆம் ஆண்டு டைம் இதழ் மோடியை மட்டும் புறக்கணிக்கவில்லை. அந்த பட்டியலில் இந்தியர்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. 2024ஆம் ஆண்டு சாக்சி மாலிக் (மல்யுத்த வீராங்கனை), பாலிவுட் நடிகை அலியா பட் உள்ளி ட்டவர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பலின் இந்துத்துவா அரசி யல் நிகழ்ச்சி நிரலால் உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு மிகப்பெரிய அளவில் களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் டைம் இதழில் இந்தியர்கள் பெயரே இல்லாமல் டாப் 100 பேர் கொண்ட பட்டியல்  வெளியாகியுள்ளது.