states

img

“மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார்”

“மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார்”

புதுதில்லி அதானி குழுமத்திற்கு எல்ஐசி மூலம் ரூ.34,251 கோடி நிதி தாரைவார்த்ததற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொ டர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,“எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபரின் சேமிப்பைப் பயன்படுத்தி அதா னியை மோடி மீட்கிறார். இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா? அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத் திற்கும், மே 2025இல் ரூ.33,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா? இதற்கு முன்பே, 2023இல் அதானியின் பங்குகளில் 32%க்கும் அதிகமான சரிவு இருந்த போதி லும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கியிலிருந்து 525 கோடி ரூபாய் அதா னியின் எப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்? மோடி தனது நண்பரின் பைகளை நிரப் புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பா தித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.