மும்பை காங்கிரஸ் வேட்பாள ருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததன் எதிரொலியாக நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ நிறுவனம் (Zee Entertainment Enterprises Ltd - ZEEL) மீது பழிவாங்கும் நடவடிக் கையை தொடங்கியுள்ளது மோடி அரசு. முன்பு பாஜக தலைமையிலான மோடி அரசின் கைப்பாவையாக, அதாவது “கோடி மீடியா” ஊட கக் குழுவின் ஒரு பகுதியாக ஜீ நிறு வனம் இருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடி அரசு 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்ற கணிப்பை வெளியிட்ட ஜீ நிறுவனம், திடீ ரென தனது நிலைப்பாட்டை மாற் றிக் கொண்டது. வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடா மல் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜீ குழுமத்தின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா ஆதம்பூர் தொகு தியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்தர் பிரகாஷுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடு பட்டார். ரூ.200 கோடி.. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த தன் எதிரொலியாக தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA) மூலம் ஜீ நிறுவனத்தின் மீது பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது மோடி அரசு. யெஸ் வங்கியில் (YES BANK) ஜீ நிறுவனம் வைத்திருந்த ரூ.200 கோடி நிலையான வைப்புத் தொகை தொடர்பாக தகவல் தெரிவிக்க வில்லை எனக் கூறி ஜீ நிறு வனத்தை தணிக்கை செய்யும் டெலாய்ட் (ஆடிட்டிங் நிறுவனம்) நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதமும், அந்நிறுவன பட்ட யக் கணக்காளர்களான ஏ.எம். ஜானி, ராகேஷ் சர்மா ஆகியோ ருக்கு அபராதமும் விதித்துள்ளது தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA). மேலும் ஏ.எம்.ஜானிக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ராகேஷ் சர்மாவிற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருவருக் கும் தணிக்கை தொடர்பான வேலை களில் ஈடுபட 3 ஆண்டுகள் தடை யும் விதிக்கப்படுவதாக தேசிய நிதி அறிக்கை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஹரியானா தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததற்காக பழிவாங்கவும், யெஸ் வங்கியில் ஜீ நிறுவனம் வைத்திருந்த ரூ.200 கோடி நிலையான வைப்புத் தொகையை கைப்பற்றவுமே டெலாய்ட் நிறுவனம் மூலம் மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக் கின்றன.