states

img

2026-க்கு பிறகு மோடி அரசு நீடிக்காது சஞ்சய் ராவத்

2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி அரசு நீடிக்க வாய்ப் பில்லை என சிவசேனா (உத்தவ்) கட்சி கூறி யுள்ளது. இதுதொ டர்பாக அக்கட்சி யின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறு கையில், “ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நீடிக்குமா என்ற சந் தேகம் உள்ளது. தனது ஆட்சிக் காலத்தை மோடி ஒருபோதும் நிறைவு செய்யமாட்டார். மத்தியில் ஆட்சி கலைந்தால், அது மகாராஷ்டிர அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் (சந் தோஷ்) மாநில அமைச்சருக்கு தொடர் புண்டு. சிறப்பு புலனாய்வு விசாரணை க்கு குழு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என அவர் கூறினார்.