ஒரே உரிமத்தின் கீழ் கனிம எண்ணெய் திட்டம் புதிய அறிவிப்பு வெளியிட்டது மோடி அரசு
ஹைட்ரோகார்பன் உரிமம் என்பது பெட்ரோலி யம், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை ஆய்வு செய்யவும், தோண்டி எடுக்கவும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் அனுமதி ஆகும். தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி களில் இந்த உரிமங்கள் குறித்து ஒன்றிய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டிருந்தா லும், சுற்றுச்சூழல் மற்றும் மாநில அரசின் அனுமதி இல்லாததால் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கா மல், எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய துறை வழங்கும் ஒரே உரிமத்தின் கீழ் அனைத்து வகையான கனிம எண்ணெய் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு. இந்த புதிய அறிவிப்பில், “விண்ணப்பித்த 180 நாட்களில் உரிமம் வழங்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீண்டகால உரிமங்கள் வழங்கலாம். அதனை பொருளாதார ஆயுள் காலம் முடியும் வரை மேலும் நீட்டிக்கலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.