states

மோடி அரசு மக்களை முட்டாளாக்குகிறது: சங்கராச்சார்யா

மோடி அரசு மக்களை முட்டாளாக்குகிறது: சங்கராச்சார்யா

சிந்து நதியை தடுக்க இந்தியாவிடம் கட்டமைப்பு இல்லை

உலகளவில் நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான முதன்மையான ஒப்  பந்தங்களில் ஒன்று சிந்து நதிநீர்  ஒப்பந்தம் ஆகும். 1947இல் இந்தியா -  பாகிஸ்தான் பிரிவினையின் போது சிந்து  நதி அமைப்பின் நதிகள் ஒரு நாடுகளுக் கும் பொதுவானதாக இருந்தன. இத னால், இரு நாடுகளுக்கும் நதிநீர் தொடர்  பாக அவ்வப்போது மோதல் வெடித்தது.  இறுதியில் 1960ஆம் ஆண்டில் அப்போ தைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கான் ஆகியோரால் ‘சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம்’ போடப்பட்டது.  இத்தகைய சூழலில் பஹல்காம் தாக்  குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரி விக்கும் நோக்கத்தில் 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து  செய்வதாக அறிவித்துள்ளது.ஒன்றிய அர சின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலம் ஜோஷி மடத்தின் சங்க ராச்சார்யா அவிமுக்தேஷ்வரானந்த் மோடி அரசின் சிந்து நதிநீர் ஒப்பந்த  ரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறுகை யில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து  செய்வோம் என ஒன்றிய அரசு அறி வித்துள்ளது. சிந்து நதியின் நீரை பாகிஸ்  தானுக்கு செல்லாமல் தடுக்க நம்மிடம் எந்த கட்டமைப்புகளும் இல்லை. அதனை  உருவாக்க இந்தியாவிற்கு இன்னும் 20  ஆண்டுகள் ஆகும். ஒன்றிய அரசு மக்  களை முட்டாளாக்குகிறது” என காட்ட மாக கூறியுள்ளார்.