உ.பி.,யில் காதல் ஜோடி ஆணவப் படுகொலை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் அருகே உள்ளது ஜௌன்மானா கிரா மம். இந்த கிராமத்தில் ராஜேஷ்வரின் மகன்பல்ராம் (21), புஷ்பேந்திராவின் மகள் திருஷ்டி (18) ஆகிய இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை பல்ராம், திருஷ்டியின் குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் அவரை சந்திக்க வீட்டிற்குச் சென்றதாகக்கூறப்படுகிறது. அடுத்த சில மணிநேரங்களில், அதாவது ஞாயிறன்று மாலை பல்ராம் - திருஷ்டி ஆகிய இருவரும் அருகில் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முதலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காவல்துறை விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருஷ்டி யின் குடும்பத்தினர் பல்ராம் - திருஷ்டி யை ஆணவப் படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.