states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆனால் தான் பேச எழுந்திருக்கும் போதெல்லாம் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது. 

திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா

தமிழ்நாடு 2 பேரிடர்களை சந்தித்து ரூ. 37,000 கோடி நிவாரணம் கோரியது. ஆனால்  ரூ.270 கோடியை மட்டுமே மாநில பேரிடர் நிதி மூலம் வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கும் நிதி வழங்கவில்லை. இவற்றை எல்லாம் ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பிக்கொண்டே இருப்போம். வக்பு  மசோதாவுக்கு எதிராக ஆர்ஜேடி அனைத்து இடங்களிலும் குரல் எழுப்பும். மதச்சார்பின்மையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மதச்சார்பின்மை நாட்டின் முக்கியமான கலாச்சாரம் ஆகும்.

திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி

யாராக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கவோ அல்லது தீர்ப்பை நிராகரிக்கவோ முடியாது. இந்திய அரசியலமைப்பின் 143ஆவது பிரிவின் கீழ், அனைத்து அதிகாரங்களும் உச்சநீதிமன்றத்திற்கு ஆதரவாக உள்ளன. இதனை மோடி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.