அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இழிவான கருத்துக்களை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் பீகார் மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தின. 38 மாவட்டத் தலைமையகங்கள் உட்பட 57 க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் என 24,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.