“நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று”
தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங் களில் நிலவும் காற்று மாசு பிரச்ச னை குறித்து நாடாளுமன்றத்தில் விரி வாக விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வெள்ளியன்று இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”நமது நாட்டின் பெரு நகரங்களில் பல காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. மக்க ளுக்கு புற்று நோய் வருகிறது. வயதான வர்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். நமது நகரங்களில் காற்று மாசுவை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து அரசாங்கம் ஒரு திட்டத்தை உரு வாக்குவது முக்கியம். விவாதம் தான் ஆரோக்கியம் அத்தகைய திட்டத்தை உருவாக்கு வதில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்ப தில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இப்போதெல்லாம், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் உடன்படக்கூடிய பிரச்சனைகள் மிக மிகக் குறைவு. காற்று மாசு குறித்து அரசாங்கம் நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். நீங்கள் எங்களை குற்றம் சொல்வது அல்லது நாங்கள் உங்களை குற்றம் சொல்வது என்பதாக இல்லாமல், விவாதம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.