states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள அமைச்சர் சிவன்குட்டி

நவோதயா பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு என்சிஇஆர்டி இந்தியில் பெயர் வைத்துள்ளது. இது தவறானது ; கண்டனத்துக்குறியது. இந்தியில் பெயர் வைத்ததை என்சிஇஆர்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி

வக்பு சொத்துக்களை முறையாக பயன்படுத்தி இருந்திருந்தால் இஸ்லாமிய இளைஞர்களுக்கு, தங்கள் சைக்கிளுக்கு பஞ்சர் போடும் நிலைமை வந்திருக்காது என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது சித்தாந்தத்தை நாட்டிற்காக பயன்படுத்தியிருந்தால், பிரதமர் மோடி அவரது சிறு வயதில் டீ விற்றிருக்க மாட்டார்.

ஜார்க்கண்ட் அமைச்சர் இர்பான் அன்சாரி

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வக்பு போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள் மூலம் சிறுபான்மை சமூகத்தை குறி வைக்கிறது. முஸ்லிம் மக்களின் உரிமைகளும், நிலங்களும் பறிக்கப்படுகின்றன. ஜார்க்கண்டில் வக்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ராஷ்டிரிய லோக் ஜன் சக்தி தலைவர் பசுபதி குமார் பரஸ்

நான் தலித் என்பதாலேயே எங்கள் கட்சியை பாஜக மதிக்கவில்லை. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.