states

img

கேரள இடதுசாரி அரசின் கனவுத் திட்டம் அனைவருக்கும் சொந்த நிலம் : 4.11 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா

கேரள இடதுசாரி அரசின் கனவுத் திட்டம் அனைவருக்கும் சொந்த நிலம் : 4.11 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா

திருச்சூர் கேரளத்தில் பினராயி விஜயன் தலை மையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் கனவுத் திட்டமான ‘அனைவருக்கும் சொந்த நிலம்’ என்பது நனவாகி வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்பதரை ஆண்டுகளில் 4.11 லட்சம் பட்டாக் கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 43,478 பட்டாக்கள். நாள் ஒன்றுக்கு 119 பட்டாக் கள், ஒரு மணி நேரத்திற்கு 5 பட்டாக்கள் என்கிற அளவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பல தலைமுறை காத்திருப்புக்கு முடிவு கட்டி, முதல் பினராயி அரசாங்கத்தால் 1,77,011 பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டன. அடுத்த டுத்த எல்டிஎப் ஆட்சி நிர்வாகத்தின் கீழ், மேலும் 2,33,947 குடும்பங்கள் நில உரிமையா ளர்களாக மாறின. பஞ்சாயத்து உறுப்பினர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை,கிராம மட்டத்தில் இருந்து தலைமைச் செயலக அதிகாரிகள் வரை உள்ளடக்கிய இந்த பட்டா வழங்கும் பணி, அதன் இலக்கை நோக்கிய பயணத்தில் வரலாறு படைத்துள்ளது. நிலமற்ற அடித்தட்டு மக்களை ஒரு துண்டு நிலத்துக்கு உரிமையாக்க வேண்டும் என்ற அரசின் உறுதியை செயல்வடிவமாக்க, மாநி லத்தில் சாதனை அளவாக 4,10,958 நிலப் பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் மலைவாழ் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1977க்கு முன்பு வன நிலத்தில் குடியேறிய அனைத்து விவசாயிகளுக்கும் நிலப் பட்டாக்களை விநியோகிப்பது அரசின் இலக்காகும். ஒன்றிய அரசின் தடைகள் ஒன்றிய அரசின் தடைகள் ஏராளம் இருந்தன.  வனநிலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கை யை விரைவுபடுத்த மாநில அரசு தனி உத்தரவு பிறப்பித்தது. ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்ற நிலங்களில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறைகளின் கூட்டு ஆய்வு அறிக்கை கிடைக் காத நிகழ்வுகளில் நிலப் பட்டாக்களை வழங்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6,723 பேருக்கு 1793.6294 ஹெக்டேர் வன நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. 30 ஆண்டுக ளுக்குப் பிறகு நிலப் பட்டாக்கள் வழங்கு வதற்கான கூட்டு ஆய்வு தொடங்கியுள்ளது.

அனைவருக்கும் பட்டா -  கேரள முதலமைச்சர்

‘நிலமற்றோர் இல்லாத கேரளம்’ என்கிற இலக்கை நோக்கி நாம் அதி விரைவாக முன்னேறிக் கொண்டி ருக்கிறோம். வளர்ச்சியும் அரவணைப்பும் ஒன்றாக கைகோர்க்கும் நாடாக கேரளத்தை மாற்ற எல்டிஎப் அரசுக்கு சாத்திய மாகி உள்ளது. நிலமற்ற ஒருவர்கூட இல்லாத கேரளம் என்கிற கனவு நனவாக நாம் ஒன்று பட்டு முன்னேறுவோம் என கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

கேரளத்தில் அனைவருக்கும் நிலம், அனைத்து நிலங்களுக்கும் ஆவணம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் எல்டிஎப் அரசு வெகு தூரம் முன்னேறி உள்ளது. பட்டா இயக்க மும் சட்டமன்றமும் இலக்கை நோக்கிய பாய்ச்சலுக்கு ஊக்கமளித்தன. 2016இல் எல்டிஎப் அரசு அதிகாரத்திற்கு வந்தபிறகு 4.11 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப் பட்டது. மலைப்பகுதி மக்களின் பட்டா பிரச்ச னையில் பயனுள்ள தலையீடுகள் மேற் கொள்ளப்பட்டன. 6,723 பேருக்கு 1793.6294 எக்டேர் வன நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இது புதிய வரலாறு. கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன்