சோதனை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் மோடி அரசுக்கு “காஷ்மீர் டைம்ஸ்” பத்திரிகை நிறுவனம் பதிலடி
ஜம்மு ஜம்மு-காஷ்மீர் பகுதியின் முக்கிய பிராந்திய ஊடக மாக இருப்பது “காஷ்மீர் டைம்ஸ்” பத்திரிகை ஆகும். 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை செய்தித்தாள் மற்றும் டிஜிட்டல் வடிவில் இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத் தில் (2021 - 2022) காஷ்மீர் டைம்ஸின் செய்தித்தாள் பதிப்பு நிறுத்தப் பட்டது. தற்போது டிஜிட்டல் வடி வில் மட்டுமே “காஷ்மீர் டைம்ஸ்” செய்தி மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வியாழனன்று ஜம்முவின் ரெசிடென்சி சாலை யில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் அலு வலகத்தில் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) திடீரென சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சோதனை மேற்கொள் ளப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் புலனாய்வு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படு கிறது. காஷ்மீர் டைம்ஸ் அலுவல கத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மவுனமாக்க முயற்சி இந்நிலையில், காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் பிரபோத் ஜம்வால், அனுராதா பாசின் ஆகி யோர் வெளியிட்டுள்ள கூட்ட றிக்கையில், “எங்கள் அலுவல கத்தில் சோதனை நடவடிக்கை களை உறுதிப்படுத்தும் அதிகா ரப்பூர்வ அறிவிப்போ அல்லது அறிக்கையோ எங்களுக்கு இது வரை கிடைக்கவில்லை. சோதனை கள் நடந்ததாகக் கூறப்படும் எங்கள் அலுவலகம், கடந்த 4 ஆண்டுக ளாக மூடப்பட்டு செயல்படாமல் இருக்கிறது. ஆனால் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. எங்கள் அலுவலகத்தில் சோ தனை நடத்தப்பட்டதாகத் தெரி விக்கப்படும் தகவல்கள், அரசுக்கு எதிரான செயல்பாடுகளை கையாண்டதாகக் கூறப்படும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு கள் காஷ்மீர் டைம்ஸ் நிறுவனத்தை மவுனமாக்க மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சியாகும். பொதுவாக அரசை விமர்சிப் பது, அரசுக்கு எதிரானது அல்ல. உண்மையில், அது அதற்கு நேர் எதிர்மாறானதே ஆகும். ஒரு சக்திவாய்ந்த, கேள்விகள் கேட்கும் ஊடகம் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இன்றியமையா தது ஆகும். அதிகாரத்தைக் கண்கா ணித்தல், ஊழலை விசாரித்தல், புறக்கணிக்கப்பட்ட குரல்களைப் பலப்படுத்துதல் போன்ற எங்கள் பணி, நமது தேசத்தை வலுப் படுத்துகிறதே தவிர ஒரு போதும் பலவீனப்படுத்தாது. தொடர்ந்து ஜனநாயகம் சார்ந்த பணியைச் செய்வதால்தான் நாங்கள் குறி வைக்கப்படுகிறோம். விமர்சனக் குரல்கள் பெருகிய முறையில் அரிதாகி வரும் ஒரு சகாப்தத் தில், அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசத் தயாராக இருக்கும் சில சுயாதீன ஊடகங்க ளில் ஒன்றாக நாங்கள் இருக்கி றோம். வெளிப்படைத் தன்மை தேசத் துரோகமல்ல எங்கள் அலுவலகங்கள் மீது சோதனையிட அரசுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் எங்களின் உண்மைக்கான உறுதிப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாது. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்ட விரோதமாக்குவதற்கும், இறுதியில் வாயடைப்பதற்கும் வடி வமைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். பத்திரிகைத் துறை என்பது ஒரு குற்றமுள்ள துறை அல்ல. அதே போல வெளிப்படைத்தன்மை என் பது தேசத்துரோகம் அல்ல. மேலும், எங்களைச் சார்ந்திருப்பவர்க ளுக்கு நாங்கள் தொடர்ந்து தகவல் தெரிவிப்போம், விசாரிப் போம், வாதிடுவோம், செய்திக் கட்டுரைகளை வெளியிடுவோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
