states

img

சாதி முறையை மீட்டெடுக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு; சிவகிரி யாத்திரையில் கர்நாடக முதலமைச்சரும் பங்கேற்பு

சாதி முறையை மீட்டெடுக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு; சிவகிரி யாத்திரையில் கர்நாடக முதலமைச்சரும் பங்கேற்பு

வர்கலா 93ஆவது சிவகிரி யாத்திரை மகா சம்மேளனத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகை யில்,”நாட்டின் நவீன சட்ட அமைப்பாக நால் வர்ண சாதி முறையை மீட்டெ டுக்க அரசியல் முயற்சி மேற்கொள்ளப்  பட்டு வருகிறது. அரசியலும் அதிகார மும் இந்த நோக்கத்துடன் ஒழுங்கமைக்  கப்பட்ட முறையில் செயல்படுகின்றன. அந்த முயற்சி வெற்றி பெறாது. நாரா யண குருவின் வாழ்க்கைச் செய்தியை உட்கொண்ட ஒவ்வொரு நபருக்கும் நால்வர்ணத்தை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு உள்ளது. குரு வின் தரிசனங்களை சிதைப்பதன் மூலம்  அவற்றைக் கடத்தும் முயற்சியும் நடை பெறுகிறது. குருவை எந்த சாதி அல் லது மதத்தின் எல்லைகளுக்குள்ளும் அடைத்து வைக்கும் முயற்சிகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.  கலாச்சார பாசிச நோக்கம் தேசிய அளவில் அரசு அதிகாரமே  வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சீர்  குலைத்து வருகிறது. இந்திய கலாச்சா ரத்தை ஒரு தனித்துவமான முறையில் முன்வைக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புரா ணக்கதைகள் மற்றும் கற்பனைகள் வர லாற்று உண்மைகளாக முன்வைக்கப் படுகின்றன. இது கலாச்சார பாசிசத்  தின் நோக்கம் என்பதை ஜனநாயகத்  தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் புரிந்துகொள்ள முடியும். கேரள அரசும் குருவின் பாதையில் முன்னேறி வருகிறது. 2016ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம், கேரள மக்கள் அனைவரையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் நோக் கில் நான்கு முக்கிய பணிகளை மேற்  கொண்டது. அவற்றில் மிக முக்கிய மான ஒன்று பொதுக் கல்வி பாதுகாப்பு  இயக்கம். இன்று, சாதாரண மக்களின் குழந்தைகள் உயர் தொழில்நுட்ப வகுப்பறைகளில் படிக்கின்றனர். வகுப்பறைகள் மட்டுமல்ல, பாடத்  திட்டமும் இந்தக் கண்ணோட்டத்துடன் திருத்தப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் உள்ள பலர் அறிவியலற்ற மற்றும் அபத்தமான விசயங்களைக் கற்பித்து,  குழந்தைகளை பல நூற்றாண்டு களுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்லும்போது, இங்கு பொதுக் கல்வி யைப் பாதுகாப்பதற்கு மிகுந்த முக்கி யத்துவம் அளிக்கிறோம்” என அவர் கூறினார். மிகச்சிறந்த தத்துவஞானி குருதேவ்: சித்தராமையா சிவகிரி யாத்திரையின் ஒரு பகுதி யாக நடைபெற்ற மாநாட்டை பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். சிவகிரி  மடத் தலைவர் சுவாமி சச்சிதானந்தா இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கி னார். கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் முதல மைச்சர் சித்தராமையா பேசுகை யில், “உலகளவில் நெறிமுறைகள் மறைந்து, மதம் அதிகாரத்திற்கான ஆயு தமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சகா ப்தத்தில், உண்மையான ஆன்மீகம் சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனை யில் உள்ளது என்பதை சிவகிரி நமக்கு  நினைவூட்டுகிறது. இந்தியா கண்ட மிகச்  சிறந்த தத்துவஞானிகளில் குருதேவ் ஒருவர். ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கட வுள்’ என்ற புரட்சிகர உண்மையை குரு  வெளிப்படுத்தினார். இது மேலாதிக்கம் மற்றும் சமூக விலக்குக்கு எதிரான ஒரு  வலுவான அரசியல் சவால். அறிவு மறுப்பு மூலம் சாதி அமைப்பு நிலவு கிறது என்பதை உணர்ந்த குரு, கல்வி  மூலம் ஞானம் பெறவும், அமைப்பின் மூலம் வலிமை பெற வேண்டும். கட்டமைப்பு சமத்துவமின்மையை நீக்க கல்வியே சிறந்த கருவி என்றும் அவர் கற்பித்தார். கோவில்களுக்கு பதி லாக பள்ளிகள் மற்றும் தொழில்களுக்கு  முக்கியத்துவம் அளித்தார். சிலைக்கு பதிலாக ஒரு கண்ணாடியை நிறுவு வதன் மூலம், ஒவ்வொரு மனிதனிட மும் தெய்வீகம் இருக்கிறது என்ற செய்தியை குரு வழங்கினார்” என்று அவர் கூறினார். எதிர்கால உலகின் நம்பிக்கை அமைச்சர் வி.என்.வாசவன், எஸ்என்டிபி யோகம் பொதுச் செயலா ளர் வெள்ளாப்பள்ளி நடேசன், ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் ஆகியோர் தலைமை விருந்தி னர்களாகக் கலந்து கொண்டனர். “எதிர்கால உலகின் நம்பிக்கை மற்றும் சிக்கலான தன்மை” என்ற தலைப்பில் அறிவியல் மற்றும் தொழில்  நுட்ப மாநாட்டை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தொடங்கி வைத்தார். என்.கே. பிரேமச்சந்திரன் எம்.பி தலைமை வகித்  தார். அமைச்சர் ராஜீவ் சிறப்புரை யாற்றினார். சுவாமி சந்தானந்தா, மோக னன் குந்நும்மேல், டாக்டர் கே.சிவபிர சாத், சி.பி.ஜான், சத்தியபாமாதாஸ், பிந்து கிருஷ்ணா, டாக்டர் சுரேஷ் குமார் மதுசூதனன், பிஜினி எஸ்.கோத்தாரி, சுவாமி ஞானதீர்த்தா, சுவாமி அமேயானந்தா ஆகியோர் பேசி னர். ஊடகவியலாளர் மாநாட்டை ஏ.ஏ. ரஹீம் எம்.பி துவக்கி வைத்தார். மேத்யூ  குழல்நாடன் எம்எல்ஏ தலைமை வகித்தார். வி.எஸ்.ராஜேஷ், பி. ஸ்ரீகுமார், என்.எம்.பியர்சன், ஷாஜன் ஸ்கரியா, சுஜயா பார்வதி, சுவாமி விசா லானந்தா, சுவாமி சங்கரானந்தா ஆகி யோர் பேசினர். முன்னதாக சிவகிரி யாத்திரையின் முக்கிய நிகழ்வான ஊர்வலத்தில் புத னன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். அலங்கரிக்கப்பட்ட குருதேவர் முக்தி மகாசமாதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.