ஜூலை 29 ஆபரேசன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
புதுதில்லி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆப ரேசன் சிந்தூர் குறித்து மாநிலங்களவை மற்றும் மக்கள வையில் ஜூலை 29 அன்று விவாதம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 16 மணிநேர மும் மாநிலங்களவையில் 9 மணி நேரமும் விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜூலை 23 நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதில ளிப்பார்களா என உறுதியாக தெரியவில்லை. எனினும் பதில ளிக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. பிற அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேசன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலி யுறுத்தி கூட்டத்தொடர் துவங்கியது முதல் 3 நாட்களாக எதிர்க்கட்சி கள் போராடி வந்தது குறிப்பி டத்தக்கது.