states

img

இந்தியா - சீனா எல்லையில் கூட்டு ரோந்து துவங்கியது!

புதுதில்லி, நவ. 1 -  இந்திய மற்றும் சீன ராணுவத்தின ரின் ஒருங்கிணைந்த ரோந்துப் பணி டெம்சோக்கில் வெள்ளிக்கிழமை (நவ.1) தொடங்கியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  விரைவில் டெப்சாங்கிலும் ஒருங்கி ணைந்த ரோந்து பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் கடந்த 2020 ஜூன் 15 அன்று இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், பேட்ரோல் பாய்ண்ட் 14-இல் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியத் தரப்பில் 20-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் பலியானவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.  அன்றுமுதல், இந்திய - சீன எல்லையில் இரண்டு தரப்பிலும் பதற்றம் அதிகரித்தது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், மறுபுறத்தில் இரு நாடுகளுமே எல்லையில் வீரர் களைக் குவித்தன. தற்காலிக கூடாரங் கள் அமைத்து வீரர்கள் தங்கினர். எல்லையில் நடக்கும் வழக்கமான பணி கள் அனைத்தும் தடைப்பட்டன. ரோந்து பணிகள் கூட முறையாக நடக்கவில்லை

4 ஆண்டுக்குப் பின் உடன்பாடு

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 21 அன்று எல்ஏசி (LAC) எனும் எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் ரோந்து செல்லும் விஷயத்தில் இருநாடுகளுக்கும் இடையே படைத் தளபதிகள் மட்டத்தில் உடன்பாடும்- விரிவான ஒப்பந்தமும் எட்டப்பட்டது. அதை பின்னர் அக்டோபர் 21-ல்,  கஜான் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட் டிற்கு முன்பாக, படைத் தளபதிகள் மட்டத்தில் விரிவான ஒப்பந்தம் கையெழுத்தானது 1. டெப்சாங் பகுதியில்: பேட்ரல் பாயிண்ட் (PP) 10, 11, 11A, 12, மற்றும்  13 வரை இந்திய ராணுவம் ரோந்து செல்ல முடியும்; 2. டெம்சோக் பகுதி யில்: பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை  அணுக முடியும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன. ஏனெனில், முன்னதாக - சீன மக்கள் விடுதலை ராணுவம் டெப்சாங் சமவெளிகளில் உள்ள Y-சந்திப்புக்கு அப்பால் இந்திய ரோந்துக்களை தடுத்து வந்தது.

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு'

இந்த உடன்பாடு மட்டுமன்றி, எதிர் கால நடவடிக்கைகளாக, இடைவெளி மண்டலங்கள் (buffer zones) படிப் படியாக கையாளப்படும், புதிய ரோந்து விதிமுறைகள் உருவாக்கப் பட வேண்டும். கிழக்கு லடாக்கில் பதற்ற நிலை தொடங்கியதிலிருந்து குவிக்கப்பட்ட படைகளின் எண்ணிக் கையை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் 4 ஆண்டுக்குப் பின் அதி காரப்பூர்வ சந்திப்பையும் நடத்தினர். 

விலக்கிக் கொள்ளப்பட்ட படைகள்

தொடர்ச்சியான இந்த நடவடிக்கை களின் பின்னணியில், எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டில் குவிக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களை - குறிப்பாக, கிழக்கு  லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய 2 பகுதிகளில் பரஸ்பரம் படை  களை விலக்கிக் கொள்ளும் பணியை இந்தியாவும் சீனா வும் துவங்கின. 2020-ல் பதற்ற நிலை தொடங்கியதி லிருந்து அமைக்கப்பட்ட அனைத்து தற்காலிக மற்றும் அரை நிரந்தர கட்டமைப்பு கள் அகற்றப்பட்டன. இந்திய வீரர்கள் சார்டிங் நாலாவின் மேற்குப் பகு திக்குத் திரும்பும் அதே  நேரம் சீன வீரர்கள் நாலா வின் கிழக்குப் பகுதிக்குத் திரும்பினர். இவ்வாறு இருநாட்டுப் படைகளும் புதன்கிழமைக்குள் (அக் டோபர் 30)- அதாவது, 2020 மே மாதம் தொடங்கிய பதற்ற நிலையின் அனைத்து முனைகளிலிருந்தும் படை கள் விலக்கத்தை நிறைவு செய்தனர்.

தீபாவளி  இனிப்பு பரிமாற்றம்

தீபாவளியன்று (அக்.  31), எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் பல எல்லைப் புள்ளிகளில் (Point) இந்திய மற்றும் சீன படையினர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டன. இரு நாட்டுப் படைவீரர்கள் எல் லையில் சந்தித்துக் கொள் ளும் (Border Personnel Meeting - BPM) அரு ணாச்சல பிரதேசத்தில் உள்ள பும் லா, கிபிது, லடாக்கில் உள்ள சுசுல், தௌலத் பெக் ஓல்டி, சிக்கிமில் நாது லா ஆகிய 5 முக்கியமான இடங்களில் இனிப்புக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படை கள் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்டன.  மீண்டும் துவங்கிய ரோந்துப்பணி இந்நிலையில், 4 ஆண்டு களுக்குப் பிறகு, வெள்ளிக் கிழமையன்று (நவ.1) இந்திய மற்றும் சீன ராணுவத்தினரின் ஒருங்கி ணைந்த ரோந்துப் பணி டெம் சோக்கில் வெள்ளிக்கிழமை (நவ. 1) தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெப்சாங்கிலும் விரைவில் ரோந்துப் பணிகள் தொ டங்கும் என்று ராணுவ வட்டா ரங்கள் கூறியுள்ளன. “இரு தரப்பினரும் நேரு க்கு நேர் மோதல்களைத் தவிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவர். ரோந்து அணி களின் எண்ணிக்கை 20 வீரர்களுக்கும் குறைவாக இருக்கும். ரோந்துப் பணி களின் கால இடைவெளியை இரு தரப்பினரும் கலந்தா லோசித்து முடிவு செய் வர்” என்று ரோந்து பணிக ளுக்கான புதிய விதிமுறை களும் வகுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கிழக்கு லடாக்கில் இருநாடுக ளுக்கும் ஏற்பட்ட மோதல்-  பதற்றம் நான்கு ஆண்டுக ளுக்குப் பிறகு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.