ஓய்வூதியம் விண்ணப்பித்துள்ள ஜகதீப் தன்கர்
ஜகதீப் தன்கர் உடல்நலக் குறை வினால் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை மீண்டும் தனக்கு வழங்க வேண்டு மென ராஜஸ்தான் அரசிடம் அவர் விண் ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் அம்மாநில தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்பு எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த ஜகதீப் தன்கர் 1993 முதல் 1998 வரை கிஷன்கார் தொகுதியின் (ராஜஸ்தான்) காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு மாதம் ரூ.35,000 வரை ஓய்வூதி யம் வழங்கப்படுகிறது. 70 வயதை அடைந்தவுடன் அதில் 20% அதிகரிக் கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போது 74 வயதாகும் ஜகதீப் தன்க ருக்கு மாதம் ரூ.42,000 ஓய்வூதிய மாக வழங்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.