states

img

“10 பேர் உயிரிழந்தது பெரிய விஷயமா?” பத்திரிகையாளரிடம் ம.பி., பாஜக அமைச்சர் விஜய் வர்கியா சர்ச்சைப் பேச்சு

“10 பேர் உயிரிழந்தது பெரிய விஷயமா?” பத்திரிகையாளரிடம் ம.பி., பாஜக அமைச்சர் விஜய் வர்கியா சர்ச்சைப் பேச்சு

இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரம் என 8ஆவது முறை யாக தேர்வு செய்யப்பட்டது இந்தூர். பாஜக ஆளும் மத்தியப்  பிரதேச மாநிலத்தின் இந்தூரின் பாகிரத்புரா பகுதியில், மலம் கலந்த  குடிநீரை குடித்த சம்பவத்தில் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற் பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.   2400-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு இந்தூர் தலைமை மருத்துவ  மற்றும் சுகாதார அதிகாரி அலுவல கத்தின் அறிக்கையின்படி, சுகா தார அதிகாரிகள் 7,992 வீடுகளை ஆய்வு செய்து சுமார் 39,854 பேரை  பரிசோதித்தனர். வாந்தி மற்றும்  வயிற்றுப்போக்கு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 2,456 பேரை  சம்பவ இடத்திலேயே அடையா ளம் கண்டனர். புதன்கிழமை மாலை நிலவரப்படி, 212 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனும திக்கப்பட்டனர். அவர்களில் 50 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 26 பேர் அவசர சிகிச்சை பிரி வில் உள்ளனர். 162 பேர் புதிதாக  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என அதில் கூறப்பட் டுள்ளது. பலி எண்ணிக்கை  உயரும் அபாயம் உயிரிழந்த 10 பேரில் 6 மாத கைக்  குழந்தையும், 6 பெண்களும் அடங்கும். அவசர சிகிச்சை பிரி வில் சிகிச்சை பெற்று வரும் 26 பேரில் 11 பேரின் உடல்நிலை கவ லைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உடல் நலக்குறைவுடன் தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு வருவ தால் நிலைமை மோசமாகும் என  இந்தூர் தலைமை மருத்துவ அதி காரி கூறியதாக செய்திகள் வெளி யாகின. பாஜக அமைச்சர் அடாவடி குடிநீர் மூலம் 10 பேரை காவு  வாங்கிய பாகிரத்புரா பகுதி இந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆகும். நகராட்சி நிர்வாகம் விநி யோகிக்கப்பட்ட குடிநீர் மூலமா கவே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.  பாகிரத்புரா பகுதி இந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி  என்ற நிலையில், அந்த தொகுதி யின் எம்எல்ஏவும், அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா,”10 பேர் உயிரிழந்தது பெரிய விஷயமா?” என்ற தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.  அதானி கட்டுப்பாட்டில் உள்ள என்டிடிவி செய்தி நிறுவனத்தின் நிரூபர்,”பாகிரத்புரா பகுதியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக என்ன  சொல்கிறீர்கள்? அடுத்த கட்ட நட வடிக்கை என்ன?” என கேள்வி  எழுப்பினார். இதற்கு பாஜக  அமைச்சர் கைலாஷ் விஜய்வர் கியா,”வீணான அல்லது பயனற்ற கேள்விகளை கேட்காதீர்கள் (போகட் ப்ரஷ்ன் மத் புச்சியே - இந்தியில்)” எனக் கூறினார். மேலும் “கண்டா” என்றும் கூறி யுள்ளார். இந்தியில் “கண்டா” என்ற  சொல் பேச்சுவழக்கில் பயனற்றது, குப்பை என்ற தமிழ் விளக்கத்தை அளிக்கும் சொல்லாகும்.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசு மாறு பத்திரிகையாளர் கூறினார். இதற்கு அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்ச ருடன் வந்த பாஜக குண்டர்கள் பத்தி ரிகையாளரை மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைர லாகி வருகிறது. மேலும் 10 பேர்  செத்ததெல்லாம் ஒரு விஷயமா? என்ற தொனியில் அவர் பேசிய தற்கு நாடு முழுவதும் கண்டனங் கள் குவிந்து வருகின்றன.

10 பேர் உயிரிழந்த பகுதியின் கவுன்சிலர் ஊஞ்சல் ஆடி அலட்சியம்

இந்தூரின் பாகிரத்புரா பகுதி கவுன்சிலராக இருப்பவர் பாஜக வைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் மிஸ்ரா என்று  கூறப்படுகிறது. மலம் கலந்த குடிநீரை குடித்ததால் 10 பேர் உயி ரிழந்து தனது வார்டு பகுதி பதற்றமாக இருந்த சூழலில், அதே பகு தியில் உள்ள பூங்கா ஒன்றில் பாஜக கவுன்சிலர் மிஸ்ரா ஊஞ்சல் ஆடி அலட்சியமாக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வை என்டிடிவி செய்தி நிறுவனத்தின் துணை ஆசிரியர் அனுராக் திவாரி வெளியிட்டுள்ளார்.