states

img

சர்வதேச மகளிர் தினம் ; பெண் பணியாளர்கள் மட்டும் இயக்கிய சிறப்பு ரயில்

சென்னை, மார்ச் 8-   சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சென்னை பாது காப்பு கணக்குகள் கட்டுப் பாட்டாளர் (சிடிஏ) அலுவலகத்தில்  பணி புரியும் பெண் ஊழி யர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டுப் போட்டி கள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மார்ச் 7அன்று கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 6 பெண் ஆளுமைகள் கவுரவிக்கப்பட்டனர்.  சவிதா மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஷீஜா எஸ் வர்கீஸ், சமூக ஆர்வலரும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் வெங்கட்ராமனின் மகளுமான பத்மா வெங்கட்ராமன், மருத்து வர் எஸ்.ஹேமா மாலினி ஆகி யோருக்கு சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.  சென்னை பாதுகாப்பு கணக்கு கள் கட்டுப்பாட்டாளர் அலுவல கத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 பெண் அலுவலர்கள் மற்றும் ஊழி யர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.இதன் தொடர்ச்சியாக பாட்டு, பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.