ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி
சேலம், மார்ச் 8- கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், சேலத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி சனியன்று நடைபெற்றது. ஓவிய, சிற்பக் கலையினை வளர்த்திடும் நோக்கில், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலை ஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி நடத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கலை பண்பாட்டுத்துறை சேலம் மண்டலத்தின் சார்பில், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண் காட்சி சேலம் சின்மயா வித்யாலயா மெட்ரிகு லேசன் பள்ளியில் சனியன்று நடைபெற்றது. சேலம் மண்டல உதவி இயக்குநர் சி.நீல மேகன் வரவேற்றார். மாவட்ட சுற்றுலா அலு வலர் வினோத்குமார் கண்காட்சியின் திறந்து வைத்து, வாழ்த்திப் பேசினார். பள்ளியின் முதல்வர் இந்துமதி சிறப்புரையாற்றினார். சேலம் மாவட்ட கருவூல அலுவலர் சி.ஸ்ரீதர்மூர்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கருத்தரங்கம்
நாமக்கல், மார்ச் 8- நாமக்கல்லில் சனியன்று வணிகர்களுக்கான கருத்த ரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் கல்கி நிலையம் தொழிலா ளர் துறையுடன் இணைந்து, கடைகள், நிறுவனங்கள், உணவு மற்றும் போக்குவ ரத்து நிறுவனங்கள் தொடர் பான தொழிலாளர் நலச் சட் டங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம், நாமக்கல் சனு இண்டர் னேஸ்னல் கூட்டரங்கில் சனி யன்று நடைபெற்றது. கூடு தல் தொழிலாளர் ஆணையர் மற்றும் இயக்குநர் சசிகலா தலைமை வகித்தார். தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகா தார இணை இயக்குநர் கவிதா வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் மாவட்டத் தலை வர் ஜெயகுமார் வெள்ளை யன் துவக்கவுரையாற்றி னார். ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் சிறப்புரையாற்றினார். இக் கருத்தரங்கில், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் வர்த் தகர்கள், நிறுவன உரிமை யாளர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து எடுத்துரைக்கப் பட்டது.
காளம்பாளையம் குப்பைக் கிடங்கில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பூர், மார்ச். 8 - திருப்பூர் அருகே பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட காளம்பாளையம் குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத் திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி உள் ளது. காளம்பாளையம் பயன்படுத்தப்படாத கல்குவாரியில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையில் தீ வைக்கப்பட்டு, நச்சுப் புகைகள் சுற்றுப்புற குடியிருப்புகளுக்கு பரவி பாதிப்பு ஏற்படுத்தியது. இப்பிரச்சனையில் சுற்றுப்புறச் சூழல் ஆர்வ லர் சதீஷ்குமார் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, திருப்பூர் வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர், திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் காளம்பாளையம் குப்பை கிடங்கில் தேவையான பராமரிப்பு ஏற்பாடுகளை செய்யவும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிலிருந்து நச்சு வாயுக்கள் வராமல் தடுக்கவும் உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு வார காலத் தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கேட்டுக் கொண் டுள்ளார்.
ரூ.4.51 கோடி சொத்து பாகப்பிரிவினை
திருப்பூர், மார்ச் 8 – திருப்பூரில், தேசிய மக்கள் நீதிமன் றத்தில் ரூ.4.51 கோடி சொத்து பாகப்பிரி வினை வழக்கு சமரச முடிவு எட்டப்பட் டுள்ளது. திருப்பூர் தெற்கு வட்டம், டிமான்டி முதல் வீதியைச் சேர்ந்த என்.முகமது ஜக்கரியாவுக்கும், அவரது பங்குதாரர் அண்ணாமலைக்கும் இடையே நிலவி வந்த பாகப்பிரிவினை வழக்கு, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக் கப்பட்டது. முகமது ஜக்கரியா, அண் ணாமலை மீது திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பாகப் பிரிவினை கோரி வழக்கு தொடுத்திருந் தார். இந்த வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், சனியன்று, நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. இரு தரப்பினரும் சமர சமாகப் பேசி, ரூ.4 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள சொத்தை பங் கிட்டுக் கொண்டனர். சமரசத் தீர்வு தீர்ப்பு நகலை நீதிபதிகள் இரு தரப்பி னருக்கும் வழங்கினர்.
யானை கொல்லப்பட்டு தந்தம் திருட்டு வனக்காப்பாளர்கள் பணியிடை நீக்கம்
தருமபுரி, மார்ச் 8- ஏரியூர் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத் தில், பென்னாகரம் வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர் உள்ளிட்ட இரண்டு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே ஏமனூர் பீட் கோடு பாய்பள்ளம் பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட் டுக் கொன்று, அதன் தந்தங்களை அடையாளம் தெரியாத நபர் கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்கு சென்ற தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியி லேயே ஆண் யானையை புதைத்தனர். யானையை சுட்டுக் கொன்ற நபர்கள் குறித்து வனத்துறையினர் அடங்கிய ஏழு குழுவினர், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியையொட்டி உள்ள கிராமங்கள், பரிசல் ஓட்டும் தொழிலாளா்கள், கால் நடை வளர்ப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஐந்து நாள்களுக்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏமனூர் பீட் பகுதியில் முறையாக ரோந்து பணி மேற்கொள்ளவில்லை எனவும், வனப்பகுதியில் முறையாக கண்காணிப்பு பணிகளை மேற் கொள்ளவில்லை எனவும் ஏமனூர் பீட் வனக்காப்பாளர் தாமோ தரன், வனவர் சக்திவேல் ஆகிய இருவரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இந்த விவகாரத்தில், ஏற்கெனவே யானையை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய சின்ன வத்தலாபுரம் அருகே கொட்டதண்டு காடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன், ராஜா ஆகிய இருவரையும் பிடித்து தருமபுரி உதவி வன பாது காவலர் வின்சென்ட், அரூர் உதவி வன பாதுகாவலர் சர வணன் ஆகியோர் தலைமையிலான பென்னாகரம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நீதிமன்றம்: 681 வழக்குகளுக்கு தீர்வு
உதகை, மார்ச் 8 – நீலகிரி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) மொத்தம் 681 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட் டது. நீலகிரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குக ளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில், தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனி யன்று நடைபெற்றது. இந்த நீதிமன்றம் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியு மான முரளிதரன் தலைமையில் உதகையில் நடைபெற்றது. இதில், மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிபதி லிங்கம், தலைமை குற்றவியல் நீதிபதி சசிகலா, மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளரும், சார்பு நீதியுமான பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய நீதி மன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு கள், வங்கி வழக்குகள், வாராக் கடன் வழக்குகள், குடும்பப் பிரச்சினை சம்பந்தமான வழக்குகள் என மொத்தம் 4526 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 681 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ.7 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 960 மதிப்பிலான வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இறுதி யானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளில் முத் திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக் கும் என்று நீதிமன்ற நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் கோவை, மார்ச் 8- சிட்கோ பகுதியில் உள்ள ‘மக்கள் குரல்’ மற்றும் ‘டிரினிட்டி மிரர்’ நாளிதழ் அலுவலகங்களுக்கு சனி யன்று வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. ‘மக்கள் குரல்’ நாளிதழ் கோவை அலுவலகத்திற்கு ராதாகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட் டுள்ளது. வழக்கம்போல் காலை பணிக்கு வந்த ஊழி யர்கள் மின்னஞ்சலை பார்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டிருந் ததை கண்டு அதிர்ச்சியடைந் தனர். உடனடியாக சுந்தராபு ரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற் றும் மெட்டல் டிடெக்டர் உத வியுடன் அலுவலகம் முழு வதும் தீவிர சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனை யில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீ சார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களை பிஸ்கட் கொடுத்து மயக்கும் பாஜக
அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
நாமக்கல், மார்ச் 8- மும்மொழி கொள்கைக்கு ஆத ரவாக கையெழுத்து பெற, பள்ளி மாணவர்களை பிஸ்கட் கொடுத்து பாஜக மயக்கி வருவதாக, அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் தனியார் கல்லூரி மற்றும் தமிழ்நாடு முன்பருவ கல்வி ஆசிரியர்கள் சங்கம், கல்வியாளர் கள் சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா மற்றும் ஆசிரியர் விருது விழா சனியன்று, தனியார் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இவ் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முது கலை ஆசிரியர்கள் 16 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், மகளிர் தினத் தில் பெண்களுக்கு அழகி போட்டி, கோலப் போட்டி, நடனப் போட்டி நடத்துவது முதலில் நிறுத்த வேண் டும். பெண்கள் அதற்காக பிறந்த வர்கள் அல்ல. ஆண்கள் கோலம் போட கூடாதா? நடனம் ஆடக் கூடாதா? இவையெல்லாம் தாண்டி பெண்கள் முன்னேறி வந்துள்ளனர். பெண்களுக்கு முதலில் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. இரண்டும் கிடைத்து விட்டால், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் என்ன பெண்களுக்கு சுதந் திரம் கொடுப்பது என கேட்டவர் தந்தை பெரியார், என்றார். மேலும், ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்று வது போல், பள்ளி மாணவர்க ளுக்கு பிஸ்கட், மிட்டாய் கொடுத்து கையெழுத்து வாங்கும் பாஜகவின் நடவடிக்கை, மிஸ்டு கால் கொடுத்து கட்சியில் சேர வைத் ததைப் போன்றதாகும். நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உரு வாக்கவில்லை. திறமையாளர் களை உருவாக்கத்தான் இரு மொழிக் கொள்கை தேவை என சொல்கிறோம். நீட் தேர்வுக்கு நாங் கள் எங்கள் எதிர்ப்பையும், கண்ட னத்தையும் தெரிவித்தும் நீக்காத நீங்கள், மும்மொழி கொள்கையை ஒப்புக் கொண்டால் தான் நிதி தரு வேன் என்று சொல்வது எந்த விதத் தில் நியாயம்? வரும் கல்வி யாண்டில் பல்வேறு புதிய வகுப் பறைகள் கட்ட நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது, என்றார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவ லர் மகேஸ்வரி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.