states

img

சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளராக மீண்டும் எம்.வி.கோவிந்தன் தேர்வு!

சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளராக மீண்டும் எம்.வி.கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் மார்ச் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை சிபிஐ(எம்) கட்சியின் 24ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. வகுப்புவாத - முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்கும் வகையிலான திட்டங்களை வகுக்கும் நோக்கில் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரளம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளான இன்று, எம்.வி.கோவிந்தன் மீண்டும் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 17 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 89 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் புதுமுகங்கள்.

மாநிலக்குழு உறுப்பினர்கள் பட்டியல்:

பினராயி விஜயன், எம்.வி.கோவிந்தன், இ.பி.ஜெயராஜன், டி.எம்.தாமஸ் ஐசக், கே.கே.ஷைலஜா, எளமரம் கரீம், டி.பி.ராமகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், கே.ராதாகிருஷ்ணன், சி.எஸ்.சுஜாதா, பி.சதிதேவி, பி.கே.பிஜு, எம்.சுவராஜ், பி.ஏ.முஹம்மது ரியாஸ், கே.கே.வா.ஜெயச்சந்திரன், சஜினி டி.ஜெயச்சந்திரன், வி.என். சதீஷ் சந்திரன், சி.எச்.குணம்பு, எம்.வி.ஜெயராஜன், பி.ஜெயராஜன், கே.கே.ராகேஷ், டி.வி.ராஜேஷ், ஏ.என்.ஷம்சீர், சி.கே.ஷசீந்திரன், பி.மோகனன், ஏ.பிரதீப் குமார், இ.என்.மோகன்தாஸ், பி.கே.சைனபா, சி.கே.ராஜேந்திரன், என்.என்.கிருஷ்ணதாஸ், எம்.பி.ராஜேஷ், ஏ.சி.மொய்தீன், டி.எஸ்.மொய்தீன், டி.வி. மேரி, ஆர் நாசர், சி பி சந்திரபாபு, கே பி உதயபானு, எஸ் சுதேவன், ஜே மெர்சிகுட்டியம்மா, கே.ராஜகோபால், எஸ்.ராஜேந்திரன், கே.சோமபிரசாத், எம்.எச்.ஷாரியார், எம்.விஜயகுமார், கடகம்பள்ளி சுரேந்திரன், டி.என்.சீமா, வி.சிவன்குட்டி, டாக்டர்.வி.சிவதாசன், கே.சஜீவன், எம்.எம்.வர்கீஸ், இ.என்.சுரேஷ் பாபு, பனோலி வத்சன், ராஜு கே.சால், வி.ஏ.கே.சல். லத்திகா, பி சசி, கே அனில்குமார், வி ஜாய், ஓ ஆர் கேலு, டாக்டர் சிந்தா ஜெரோம், எஸ் சதீஷ், என் சந்திரன்.

 

புது முகங்கள்

பிஜு கண்டக்கை, ஜான் பிரிட்டாஸ், எம்.ராஜகோபால், கே.ரபீக், எம்.மெஹபூப், வி.பி.அனில், கே.வி.அப்துல் காதர், எம்.பிரகாஷன், வி.கே.சனோஜ், வி.வசீப், கே.சாந்தகுமாரி, ஆர்.பிந்து, எம்.அனில்குமார், கே.பிரசாத், டி.ஆர்.ரகுநாத், எஸ்.ஜெயமோகன், டி.கே.முரளி.

செயற்குழு உறுப்பினர்கள்:

பினராயி விஜயன், எம் வி கோவிந்தன், இ பி ஜெயராஜன், கே கே ஷைலஜா, டிஎம் தாமஸ் ஐசக், டிடி ராமகிருஷ்ணன், கே என் பாலகோபால், பி ராஜீவ், கே கே ஜெயச்சந்திரன், வி என் வாசவன், சஜி செரியன், எம்.ஸ்வராஜ், பி ஏ முஹம்மது ரியாஸ், பி கே பிஜு, புத்தளத் தினேசன், எம் வி ஜெயராஜன், சிஎன் மோகனன்.