districts

img

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு: சாலை மறியல்

நாமக்கல், மார்ச் 8- உயர்ரக மதுபானக்க டைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த கண்டிப்புதூர், ஈரோடு -  சேலம் தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதி யில், உயர்ரக ஏசி மதுபானக்கடை கட்டுமா னப் பணிகள் கடந்த சில தினங்களாக நடை பெற்று, தற்போது நிறைவடைந்துள்ளது. நக ரின் மையப்பகுதியில் உயர்ரக மதுபானக் கூடம் வர இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யது. பார் உரிமையாளர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு பின்புறம் ஆளும் அரசியல் கட்சியினர் செயல்படுகி றார்கள் என குற்றஞ்சாட்டியும், மதுபானக்க டைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி பாளையம் நான்கு ரோடு பகுதியில் சனியன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, தனியார் மதுபானக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தால்  மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர். இதைய டுத்து போலீசார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து, மாலை விடுவித்தனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.