districts

img

தொழிலாளர் விரோத போக்கு: வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 8- ஒன்றிய அரசின் தொழிலாளர்  விரோத போக்கை கண்டித்து வங்கி  ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வங்கி பணிகளுக்கு தேவையான ஊழியர்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 5 நாள் வேலை திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும். செயல்திறன் மதிப் பாய்விற்கான அறிவுறுத்தல்களை திரும் பப்பெற வேண்டும். மோசமான வாடிக் கையாளர்களின் தாக்குதலிருந்து ஊழி யர், அதிகாரிகளைப் பாதுகாக்க வேண் டும். நிலுவையிலுள்ள கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். பணிக்கொடை உச்சவரம்பை 25 லட்சமாக அதிகரித்து வரி விலக்களிக்க வேண்டும். ஊழியர், அதிகாரிகளி டையே ஒற்றுமையை சீர்குலைக்கும் அணுகுமுறையை கைவிட வேண்டும். நிரந்தரப் பணியிடங்களை வெளியாட் களிடம் ஒப்படைக்கக் கூடாது மற்றும் தொழிலாளர் விரோத போக்கினைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு  பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழி யர்கள் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் வங்கிகளில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும், என வலியு றுத்தி சேலத்தில் வங்கி ஊழியர் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் கோட்டை மைதானத்தி லுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப் பின் கன்வீனர் கே.சாமிநாதன் தலைமை வகித்தார். இந்திய வங்கி ஊழியர் சம் மேளன மாநில துணைத்தலைவர் எஸ். ஏ.ராஜேந்திரன், பிஇஎப்ஐ நிர்வாகிகள் பாரதிராஜா, மகாராஜன், ரகுபதி, ஏஐபி இஏ நிர்வாகி எம்.ஸ்ரீதர், என்சிபிஇ நிர் வாகி சதீஷ்குமார், எஐபிஓசி நிர்வாகி ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.