states

img

இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மோசமான அளவில் வீழ்ச்சி

இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மோசமான அளவில் வீழ்ச்சி

2014இல் 78ஆவது இடம் ; 2025இல் 148ஆவது இடம்

ஒவ்வொரு ஆண்டும் ரூ.662 கோடி அளவில் பண இழப்பு

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் (குளோ பல் லிஸ்ட்) இந்தியா இதுவரை இல்லாத வகையில் 148ஆவது இடத்தி ற்கு இறங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில், அதாவது மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இந்தியா பாஸ்போர்ட் தரவரிசையில் 78ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு இரண்டு மடங்காகி 148ஆவது இடத்திற்கு வந்து இந்தியா மிக மோசமான அளவில் சரிவைக் கண்டுள்ளது. பலவீனமான பாஸ்போர்ட் தரவரிசை இந்திய நாட்டின் சர்வதேச மதிப்பீட்டில் வீழ்ச்சி மற்றும் இந்தியர்களின் பிரச்சனைகளை பிரதிபலிப்ப தாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பலவீனமான பாஸ்போர்ட் தர வரிசை என்பது, நாட்டின் பலவீனமான உலக நிலையையே வெளிப்படுத்துகிறது. கடினமான இமிக்ரேஷன் (குடியேற்ற வரம்புகள்) சோத னைகளால் இந்திய பயணிகள் மிக மோச மான அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதிக விசா கட்டணம் மற்றும் கூடுதல் ஆவண  தேவைகள் இருப்பதால் பாஸ்போர்ட் பெறவே இந்தியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக அடிக்கடி விசா ரத்து செய்யப்படு கின்றது. பயணத்தை ரத்து செய்ய கட்டா யப்படுத்தப்படுதலும் அதிகமாக நிகழ்கின்றன. இதனால் நேரம் மற்றும் பண இழப்பு அதிகமாக நிகழ்கிறது. குறிப்பாக ஒரு வருடத்தில் விசா மறுப்புகளால் இந்தியர்கள் ரூ.662 கோடி அளவில் பண இழப்பை  சந்தித்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பயணத்தின் போது பாஸ்போர்ட் தொலைந்தால், அவசர பாஸ்போர்ட் பெறுவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. இது நெருக்கடி நேரங்க ளில் குடிமக்களை வெளிநாட்டில் சிக்க வைக்கிறது.

மோடிக்கு அக்கறை இல்லை

இந்தியா உலக மதிப்பீட்டில் தொடர்ச்சி யான வீழ்ச்சி, குடிமக்களின் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார இழப்புகள் போன்றவை களால் பிரதமர் மோடிக்கு எந்த அக்கறையும் இல்லை. மோடி மட்டுமே சிரிக்கிறார் ; மிக நன்றாக  புன்னகைக்கிறார் ; தனது நண்பர்களு க்கு ஒப்பந்தங்களை வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் சாதாரண மனிதனின் துயரம் பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.