அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகள்; ஆக. 16-இல் வட்டமேசை மாநாடு
கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் பேட்டி
அமெரிக்காவின் அதிகப்படியான வரிகள் கேரளாவை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 16 அன்று வட்டமேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கே.என். பாலகோபால் தெரிவித்தார். குலாட்டி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனம் (கேரள அரசின் தன்னாட்சி நிறுவனம்) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், தொழில், வர்த்த கம் மற்றும் ஏற்றுமதித் துறையைச் சேர்ந்த பொ ருளாதார வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்று செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார். “பெரும்பாலான பொருளாதார வல்லு நர்கள், அமெரிக்காவின் அதிகப்படியான வரிகளை இந்திய வணிகத் துறையில் ஊடுருவு வதற்கான ஒரு உத்தியாகக் கருதுகின்றனர். இது ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லா மல், விரும்பியபடி இறக்குமதியையும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாகும். இறால், வாசனைப் பொருட்கள், ஜவுளி, முந்திரி மற்றும் தேங்காய் ஆகியவை கேரளத்தின் முக்கிய ஏற்றுமதித் துறைகள். இவற்றை ஏற்றுமதி செய்ய நாம் அதிக வரி செலுத்த வேண்டியிருந்தால், அது தொழிலா ளர்களின் ஊதியத்தையும் பிற நல நடவ டிக்கைகளையும் பாதிக்கும். ‘கோவிட்’ காலத்தில் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை விட, கட்டணப் போர், கடுமையான பின்னடை வை ஏற்படுத்தும். தேர்தலுக்குப் பிறகு பொரு ளாதாரச் சரிவைச் சமாளிக்க அமெரிக்கா மேற் கொண்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடவ டிக்கை இது!” என்று அமைச்சர் கூறினார்.