கேரளாவின் சுகாதாரத் துறைக்கு ஐசிஎம்ஆர் பாராட்டு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் ்சில் (ஐசிஎம்ஆர்) குழு கேரளா வின் சுகாதாரத் துறையைப் பாராட்டியுள்ளது. ஐசிஎம்ஆர்-இன் அம லாக்க ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் ஆஷு குரோவர் தலைமையி லான நிபுணர் குழு, சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜை சந்தித்த போது தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் கேரளா மேற்கொண்டு வரும் பல நட வடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாரா ட்டுகளைத் தெரிவித்தனர். குழந்தைகள், இளைஞர்களின் மன மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித் தும் அவர்கள் விவாதித்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்து வதற்கும் தற்கொலையைத் தடுப்பதற் கும் தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டத்திற்கு கேரளா தேர்ந்தெடுக் கப்பட்ட சூழலில், இந்தக் குழு கேரளா வுக்கு விஜயம் செய்தது. இந்த ஆராய்ச்சி திட்டம் கேரள அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பா ட்டுத் துறைகளின் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஐசிஎம்ஆர் குழுவுடன் விவாதித்தார். ஐசிஎம்ஆர் விஞ்ஞானி திட்ட அலுவ லர்கள் டாக்டர் நேஹா தஹியா மற்றும் டாக்டர் புல்கிட் வர்மா, காசர்கோடு மருத்து வக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.எஸ். இந்து, எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மனநலத் துறைத் தலைவர் டாக்டர் டி.வி. அனில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக, சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜன் என். கோப்ரேகேட் தலைமையில் நடைபெற்ற கூட்டு மேம்பாட்டுப் பட்டறை யில், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஐசிஎம்ஆர் குழுவினர் கலந்து கொண்ட னர். ஏடிஜிபி பி. விஜயன், சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மற்றும் சுகாதாரம், பொதுக் கல்வி, உயர் கல்வி மற்றும் காவல்துறை போன்ற துறை களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற னர்.